இன்று குசராத்தில் ஒரு
இளைஞர் இடஒதுக்கிடு
குறித்து ஆளும் அரசுக்கு சவால் விடுகின்றார்,. ஒரு சாரார் அது அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் நாடகம் என்றும், மறுசாரார்
இது விவாதத்திற்கு உரியது என்றும் கூறுகின்றனர்.
இந்த
கட்டுரையின் பெருவாரியான கருப்பொருள் குறிஞ்சியில் ஏற்கனவே முன்னரே
எழுதப்பட்டிருந்தது ஆயினும் நம்முடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதினால்
வெளியிடுவது ஒத்திப்போடப்பட்டது, ஆயினும்
தற்போதைய சூழ்நிலையில் தேசிய
அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி இதனை
விவாதித்தே தீரவேண்டும் என நம்புகின்றேன். எம்முடைய கருத்துக்கள்
விவாதத்திர்க்குரியது எனில் விவாதிக்க குறிஞ்சி அணி தயார்... ஆரோக்கிய விவாதம் நடத்த யாம் தயார், ஆனால் விதண்டாவாதங்கள் அல்ல...
இடஒதுக்கீடு
என்றவுடன், அது ஐயா
அம்பேத்காரினால் கொண்டுவரப்பட்டது என்ற பொதுக்கருத்து உள்ளது, உண்மையாதெனில்
விடுதலைக்கு முன்பே பிரிட்டிஷ் அரசாங்கத்தினால்தான் இந்தியா முழுவதும் அது
அமலுக்கு வந்தது எனினும் சிவாஜி மகராஜ்ஜின் பேரன் சாகுஜிதான் மகாராட்டிராவில்
அதற்கு முதலில் வித்திட்டார்.
எனினும்
தமிழ்நாட்டின் வகுப்புவாரியான இடஒதுக்கீட்டின்
பங்களிப்பு இந்தியா முழுமைக்கும் எப்பொழுதுமே விவாதப்பொருளாய்
இருந்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![]() |
| பட உதவி: மாலைமுரசு |
இட
ஒதுக்கீடு வரலாறு:
*இந்தியாவில் 1902ல்
முதலில் கோலாபூரில் சாகுஜி மகராஜினால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு
அதிகாரப்பூர்வமாக கொண்டுவரப்பட்டது.
*1909ல்
மிண்டோ-மார்லி கமிசன், இடஒதுக்கீட்டிற்கு
இந்தியா முழுவதும் வழியினை ஏற்படுத்தினர். 1919ல் அது
சட்டமாக மாறியது.
*1921ல்
சென்னை மகாணத்தில் பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%மும், பிராமணர்களுக்கு 16%மும், முஸ்லிம்களுக்கு 16%மும், கிறித்தவர்களுக்கு 16%மும்
பட்டியல் வகுப்பினருக்கு 8%மும்
வெளிப்படையாக சாதி ரீதியாக நிதிக்கட்சியின் ஆட்சியில் இடஒதுக்கீடு
கொண்டுவரப்பட்டது.
*1935ல்
இந்தியதேசியகாங்கிரசு பூனா மாநாட்டில் நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு
பிரதிநிதித்துவம் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது, பின்பு
அதே வருடம் அது சட்டமாகவும் மாறியது.
*1946ல்
அம்பேத்கார் தலைமையில் இந்திய சட்ட வரைவுக் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின்
வரைவில் வெளிப்படையாக கல்வியில் இடஒதுக்கீடு குறித்து எதுவும்
சொல்லப்படவில்லை.(என்னறிவிற்கு எட்டியவரையில்).
*1951ல்
இந்திய அரசின் முதல் சட்டத்திருத்தமே, இடஒதுக்கீட்டினை
மையமாக வைத்தே மாற்றியமைக்கப்படுகிறது, அதில் clarified that the right to equality does not bar the
enactment of laws which provide "special consideration" for weaker
sections of society என்று
மாற்றி எழுதப்படுகிறது, அதாவது
"இந்தியர் அணைவரும் சமம்" என்ற அடிப்படை உரிமையின் பெயரில் அரசின் வகுப்புவாரியான இடஒதுக்கீடு குறித்து யாரும் சவால் விடமுடியாது என்பதுதான் அது.
இந்த
திருத்தத்தின் பிண்ணனியே
அப்பொழுது சென்னை மகாணத்தில் ஏற்கனவே வழக்கத்திலிருந்த வகுப்புவாரியான
இடஒதுக்கீட்டினையே விடுதலைக்கு பின்பும் தொடருவதாக முடிவெடுத்த சென்னை மகாண அரசினை
எதிர்த்து விடுதலைக்கு பின்பு உள்ள இந்திய அரசின் சட்டத்தின் பிரிவு 15(1)ன்
பேரில் சம்பகம் தேவராசன் என்ற மாணவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமே, அதில்
தகுதி இருந்தும் சாதியின் பெயரால் தன்னால் கிண்டி பொறியியில் கல்லூரியில்
இடம்பெறமுடியவில்லை என்பதாகும், இந்த
வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாணவிக்கு சாதகமாக வந்தது, அதனால்
அதிர்ச்சி அடைந்த நேரு அவர்கள் மேல் கண்ட முதல் சட்டத் திருத்தம் 15(4)ன் மூலம்
அந்த தீர்ப்பினை நிராகரிக்கவைத்தார்.
*1953ல் கோல்கர் கமிட்டியானது 1930களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52%, ஆக அவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றார், நேரு அரசு அதிர்ச்சி அடைந்து இது நாட்டினை சாதிய ரீதியில் பிளவுப்படுத்தும் எனக்கூறியும், அறிக்கை சரியான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படவில்லை எனக்கூறியும் நிராகரித்தது.
*1953ல் கோல்கர் கமிட்டியானது 1930களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52%, ஆக அவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றார், நேரு அரசு அதிர்ச்சி அடைந்து இது நாட்டினை சாதிய ரீதியில் பிளவுப்படுத்தும் எனக்கூறியும், அறிக்கை சரியான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படவில்லை எனக்கூறியும் நிராகரித்தது.
*1963ல் ஒரு
வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதுக்கும் வகுப்புவாரியான
இடஒதுக்கிட்டின் அளவு 50%க்கு
உட்பட்டே இருக்கவேண்டும் என்றது. (தமிழகத்தில் 69%மும், குசராத்தில்
குஜ்ஜார் பிரச்சினைக்கு பிறகு 68%மும் வழக்கத்திலிருக்கிறது இதனை எதிர்த்து
வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. ஆந்திராவில் 2005ல் 50%ற்கு அதிக
சதவீத ஒதுக்கீடு அளிக்க முற்பட்டு உச்சநீதிமன்ற தடையின் காரணமாக நிலுவையில் உள்ளது). 1979ல் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டினை கொண்டுவர முயன்றபொழுது, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பின்னடவை சந்தித்ததால் உடனே தமிழகத்தில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீட்டினை அறிவித்தார்.
*1979ல் அமைக்கப்பட்ட திரு. மண்டல் (முன்னாள் பீகார் முதலமைச்சர்) அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிசன் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்படும் 22% இடஒதுக்கீடு ஆனது 49.5% ஆக அதிகரிக்கவேண்டும் என்று 1980ல் அறிக்கையை சமர்ப்பித்தது. இவருக்கும் சரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு (ஏனெனில் சாதிய ரீதியிலான கணக்கெடுப்புகள் எதுவும் இல்லை) தரவுகள் இல்லையெனினும் இவர் கிழ்மட்டஅளவில் மக்களை நேரடியாக சந்தித்து தரவுகளை உருவாக்கினார். 1989ல் ஒரு புள்ளிவிவரம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் சதவீதம் 40க்கு உட்பட்டே இருக்கும் எனத்தெரிவித்தது.
*1990 மண்டல் கமிசன் அறிக்கையின் படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27%
இடஒதுக்கிடு அமல்படுத்தப்படுகிறது. (வடமாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்படுகிறது,
அன்றைய
மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பாஜக சொல்லும் காரணங்களூள் இக்கலவரமும் ஒன்றே)
(தேசிய
அளவில் SC பிரிவினருக்கு
17 சதவீதமும், ST பிரிவினருக்கு
7.5%மும்; தமிழ்நாட்டினைப்
பொருத்தவரையில் SC பிரிவினருக்கு
17%மும் ST பிரிவினருக்கு
1%மும் மீதம் 50% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் என உள்ளது)
*1951ல்
வகுப்புவாரியான இடஒதுக்கீட்டினை சட்டமாக்கியது காங்கிராசாரே, ஆயினும் 1991ல்
நரசிம்மராவ் அரசு மண்டல் கமிசன் பரிந்துரை சர்ச்சைகளுக்கு பின்பு, பொருளாதாரத்தில்
பின்தங்கிய உயர்சாதியனருக்கும் 10% இடஒதுக்கீடு
வேண்டும் என்ற வசதியினை கொண்டு வந்தார் அதனை சட்டமாகவும் மாற்றமுயன்றார்.
*1992ல்
உச்சநீதிமன்றம் 50 சதவீதத்ற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கவே கூடாது என்றது, அதனால்
நரசிம்மராவ் தனது முந்தைய சட்டத்திருத்தத்தினை (உயர்சாதியினுள் பொருளாதாரத்தில்
பின்தங்கியவர்களுக்கு வழங்கிய சலுகையை) திரும்ப பெற்றார், ஆனால்
முரண்பாடு என்னவெனில் வேறு சில உத்திரவுகள் முந்தைய காலங்களில் சட்டத்திருத்தம்
மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பின்பற்றப்பட்டது, மேலும்
பிற்படுத்தபட்ட சமுதாயத்தினுள் கிரிமி லேயர் பின்பற்றவேண்டும் போன்றவை
காற்றில்விடப்பட்டன. (தமிழகம்
இன்றளவும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக 69% இடஒதுக்கீடும், கிரிமிலேயர்
போன்றவற்றை அமல்படுத்தமால் உள்ளது).
*2006ல் ஐஐடி, ஐஐம், எய்எம்எஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு
கொண்டுவரப்பட்டு, பலத்த சர்ச்சைக்கு பின்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
*2008ல் கேரளாவில் உயர்சாதியினருள் (நாயர் 26%, பிராமணர்கள் +சிறியன் கிறிஸ்டின் சேர்ந்து 1%) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அறிவிப்பை அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசாங்கம் நாட்டிலேயே முதலாவதாக அறிவித்தது. இது மைனாரிட்டி சமூகத்தினரால் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
*பல மாநிலங்களில் முஸ்லீம் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு 3 முதல் 5% இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
*2008ல் கேரளாவில் உயர்சாதியினருள் (நாயர் 26%, பிராமணர்கள் +சிறியன் கிறிஸ்டின் சேர்ந்து 1%) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அறிவிப்பை அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசாங்கம் நாட்டிலேயே முதலாவதாக அறிவித்தது. இது மைனாரிட்டி சமூகத்தினரால் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
*பல மாநிலங்களில் முஸ்லீம் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு 3 முதல் 5% இடஒதுக்கீடு அமலில் உள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் இடஒதுக்கீடும்:
இது ஆக கேலிக்கூத்து இன்றைய பாடத்திட்டங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் எவ்வித பொது இடங்களையும் அவர்களால் எளிதில் அணுகமுடியாது, ஆனால் அவர்களின் உரிமையை இதுவரை யாரும் பேசியதுகிடையாது, 2 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ள இந்த நாட்டில் சமீபத்தில்தான் மத்தியஅரசாங்கம் அவர்களது உரிமைக்காக இடஒதுக்கீட்டின் அளவை அதிகப்படுத்தியது. இதைப் பற்றி விவாதிக்க கட்டுரைகள் போதாது தொடர் எழுதவேண்டும்...
தமிழ்நாடும் இடஒதுக்கீடும்:
மற்ற
மாநிலங்களை ஒப்பீடு செய்கையில் தமிழகத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறைவே, அதற்க்கு
இத்தகைய இடஒதுக்கீடும், நகரமயமாதலும் காரணமென்பேன். ஆனால் இது நாகரீக சமத்துவ சமுதாயத்தினை
ஏற்படுத்துமா என்றால் கேள்விக் குறியே??? (இந்திய அளவில் சாதிரீதியிலான மோதலும், சாவும் எனப்பார்த்தால் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது, முதலில் மகாராட்டிரம் வருகிறது :( )
2005ல் தமிழக
அளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம், தமிழ்நாட்டில் உயர்சாதியனர்
எனப்படுவோர் 12 முதல் 13% இருப்பர், அவர்களுள் பெரும்பாலானோர்
வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பர் எனவும் மேலும் 30% பேர்
கல்வி அறிவே பெறவில்லை எனக் கூறுகிறது. 2004ல் 1.8% மும் 2005ல் 2.5சதவீத
உயர் சாதியினரே மருத்தவ கல்லூரியில் இடம்பெற்றனர், இது அவர்களது 13% சதவீத
மக்கள் தொகையை ஒப்பீடுகையில் சிறியதே என்கிறது....
இதுவரை தமிழகத்தினை பெரும்பாலும் மைனாரிட்டி சாதீயத் தலைவர்களே ஆண்டதால்
உயர்சாதியினருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தவே அந்தத் தலைவர்கள் விரும்பவில்லை, ஏனெனில்
அவர்கள் தங்கள் தலையை காப்பாற்றவே விரும்பினர், அந்த அளவில் சமீபத்தில் வடமாவட்டத்தில் கோலேச்சும் ஒரு தலைவர் சாதீய ரீதியிலான மக்கள்தொகை கணக்கெடுப்பினை வெளியிடவேண்டும் என்கின்றார், நாமும் அதனை பொருளாதார காரணிகளையும் சேர்த்து வெளியிடவேண்டும் என்கிறோம். அப்பொழுதான் அனைத்து சமூகத்தினரின் உண்மை நிலையும் வெளிவரும்.. மேலும் தமிழகத்தினை பெரும்பான்மை சாதி ஆளும்பொழுதே இங்கு மைனாரிட்டியான உயர்சாதியினருக்கு விடிவு வரும் (உ.பி மாயாவதி எடுத்துக்காட்டாகும்) அந்த வகையில் குறிஞ்சி அவரை வரவேற்கவே செய்கின்றது.
இந்தியாவில் உயர்சாதியினரின் நிலை:
பொதுவாக கிராமப்புறங்களில் இருந்து உயர்சாதியினர் இன்று வேலை வாய்ப்புகளின்றி நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். மேலும் சில மாநிலங்கள் உடல் நலக் குறியீட்டில் மற்ற சாதியினரை விட உயர்சாதியினர் பின்தங்கியே உள்ளனர்.
மேலும் உயர்சாதியினர் அனைவரும் மேலை நாடுகளுக்கு ஒதுங்கிவிடுவதாக ஒரு தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது. இன்றைய நிலையில் அதுவும் பொய்யே என்பேன், வாய்ப்புகள் மறுக்கப்படும்பொழுது அவர்கள் வெளியேறுவது நியாயமே என்ற பொழுதிலும், என்னளவில் நான் எடுத்த கருத்துக்கணிப்பில் மற்ற சாதியினருள் கணிசமானோர் வெளிநாட்டில்தான் உள்ளனர் என்பேன். வேண்டுமாயின் உங்களவில் இருதயசுத்தியுடன் ஒரு புள்ளிவிவரங்களை எடுங்கள், நானும் எனது தகவலை வெளியிடத் தயாராக உள்ளேன்...
கர்நாடகாவில் பிராமண சமுதாயத்தின் வருமானம் மற்றைய சாதியினை விடப் பின்தங்கியே இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகின்றது. மேலும் இந்திய அரசு மசூதிகளில் தொழுகை நடத்தும் குருக்களுக்கு 1000கோடிகளில் உதவித்தொகை அறிவித்துள்ளது, அதுபோன்று கோயில் அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்கு எதுவும் இல்லை.
மேலும் இன்றைய சூழ்நிலையில் அவர்கள் எந்த தொழிலையும் செய்யத் தயாரகவே உள்ளனர் என்றும், புதுதில்லியில் 50க்கும் மேற்பட்ட பொது கழிப்பிடங்கள் பிராமணர்களால் பராமரிக்கப்படுகின்றது என ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் ரிக்சா இழுக்கின்றனர் என மற்றொரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது, உடல் உழைப்பிற்கு தயாராகிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.
இடஒதுக்கீடு குறித்து பிரச்சினை வருமெனில் இங்கு எப்பொழுதுமே பிராமணர்கள் மீது எளிதில் துவேசம் வீசி எறியப்படுகிறது, எமது கேள்வி யாதெனில் மற்ற சாதியினர் சமூகத்தின் அடுக்கில் அவர்களுக்கு கீழே இருப்போர்களுடன் சம பந்தி போஜன் நடத்துகிறார்களா என்பதற்க்கு யுவராஜன்கள்தான் பதில்தரவேண்டும் என்பேன்...
நாகரீகம் தோன்றாத காலங்களில் மனிதர்கள் சாதிபார்த்து பிரிந்து கிடந்தார்கள், ஆனால் இன்று அரசாங்கங்கள் வாக்கு வங்கி காரணமாகவே உயர்சாதியினருக்கு அநீதி இழைக்கிறது, அது அவர்களுள் ஒர் ஒடுக்கப்பட்ட பிரிவு ஏற்பட காரணமாகிறது... இது நாகரீக சமூகத்திற்கு அழகா... மேலும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்சாதியினரின் பங்களிப்பு அபரிமிதமானது, (அவர்கள் வாங்கித் தந்த) விடுதலை வாங்கியது அவர்களை ஒடுக்குவதற்குத்தானா... இது அநீதியல்லவா, உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பேசுங்கள்...
நாகரீகம் தோன்றாத காலங்களில் மனிதர்கள் சாதிபார்த்து பிரிந்து கிடந்தார்கள், ஆனால் இன்று அரசாங்கங்கள் வாக்கு வங்கி காரணமாகவே உயர்சாதியினருக்கு அநீதி இழைக்கிறது, அது அவர்களுள் ஒர் ஒடுக்கப்பட்ட பிரிவு ஏற்பட காரணமாகிறது... இது நாகரீக சமூகத்திற்கு அழகா... மேலும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்சாதியினரின் பங்களிப்பு அபரிமிதமானது, (அவர்கள் வாங்கித் தந்த) விடுதலை வாங்கியது அவர்களை ஒடுக்குவதற்குத்தானா... இது அநீதியல்லவா, உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பேசுங்கள்...
![]() |
| குசராத் படேல் சமூக இடஒதுக்கீடு பேரணி, படஉதவி: தினமணி |
ஹர்தீப் படேல் விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகளும் நமது கோணமும்...
ஹர்தீப் படேல் என்ற தனிநபரை நாம் ஆதரிக்கவில்லை, அவரது தனிப்பட்ட வாழ்வியலும் அவரது தனிப்பட்ட நோக்கமும் எமக்கும் கேள்வியே எழுப்பிகிறது என்ற பொழுதிலும்... ஒரு சமுதாயத்தினை ஒரு தனிப்பட்ட மனிதருக்குள் அடக்கவிரும்பவில்லை அதனால் அந்தக் கேள்வியை அந்த சமுதாயத்தின் கேள்வியாகவே பார்க்கிறோம்.
படேல் சமூக கருத்து: படேல் சமுகத்திடம் நிலம் மட்டுமே இருக்கிறது ஆனால் விவசாயம் லாபகரமாக இல்லை
என்கிறார்.
பத்திரிக்கைகள் & மற்ற
நண்பர்கள்: படேல் சமூகம்தான் விவசாயம் ஏனெனில் அவர்கள்தான் குசராத்தில் பெரும் நிலச்சுவான்தார்கள், ஆக படேல் சமூகம் பொய் சொல்கின்றனர் என்கின்றன.
குறிஞ்சி: 1வருடத்திற்கு
முன்பு மோடி தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, குசராத்
விவசாயிகள் சுபிட்சமாக உள்ளனர் என்றபொழுது, இதே பத்திரிக்கைகள்
மோடி பொய் சொல்கின்றார், குசராத்தில்
விவசாயிகள் இறந்துகொண்டிருக்கின்றனர் என்றன, இன்று அதே
பத்திரிக்கைகள் படேல் சமூகம் பொய் சொல்கின்றனர் என்கின்றன. (முரண்பாடாய் தோன்றவில்லை)
ப. ச. கருத்து: 10 முதல் 15% படேல்களே பெரும் தனவந்தர்கள் (மேலும் இன்றைய சூழ்நிலையில் வணிகம் செய்வது எளிதல்ல) பெரும்பான்மையான படேல்கள் நடுத்தர ஏழைக்குடும்பத்தினர், அவர்கள் இடஒதுக்கீடு என்ற காரணியின் மூலமாக எளிதில் ஒடுக்கப்படுகின்றனர்.
ப & ந: படேல் சமூகம் முன்னேறியது (குசராத்தின் நகை வியாபாரிகள், தொழிலதிபர்கள் பெரும்பாலானோர் அந்தச் சமூகமே), முன்னேறிய
அவர்கள் மற்றைய நபர்களுக்கு உதவவேண்டியதுதானே என்கிறது, மேலும் குசராத்தில் 40எம்.எல்.ஏக்கள், 6 மந்திரிகள் என அந்த சமூகத்தினரைப் பிரதிபலிக்கின்றனர் என்கிறது.
குறிஞ்சி: முந்தைய காலங்களில் அவர்கள் வணிகர்கள் என்ற அளவுகோளின்படி வணிகமோசடிகளுக்கு குசராத்திகளைத் திட்டித்தீர்த்த இதே பத்திரிக்கைகள்தான் இன்று அவர்களை மீண்டும் மீண்டும் வணிகம் செய்யச்சொல்லுகிறது. மேலும் சமூகத்திற்குள்ளேயே உதவும் அளவுகோளின்படி பார்த்தால் மற்ற சாதியினருக்கும் அது பொருந்தாதா, இடஒதுக்கீட்டினை அனுபவிக்கும் சாதியினர் தாங்கள் வந்த பாதையை திரும்பிப் பார்க்கவில்லை அவர்களின் மற்ற சகோதரர்களுக்கு உதவவில்லை, ஏன் அவர்களின் சகோதரர்களோடு அளவலாவவும் விரும்பவில்லை எனும் உண்மை நிலையை எடுத்துரைக்க நெஞ்சுரம் இருக்கிறதா, 40எம்.எல்.ஏக்கள் என்ற அளகோளின்படி தமிழகத்தினையும் பார்ப்பார்கள் எனில் இங்கு ஆண்டபரம்பரை, ஆளும்
பரம்பரையெல்லாம் இடஒதுக்கீட்டின் கீழேயே வருகின்றனர் அதைப் பற்றியும் வெளிப்படையாக
விவாதிப்பார்களா..
ப. ச. க: உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கமாட்டீர்கள், ஆனால் உயர்சாதியினர் வரியினை மட்டும் அரசாங்கத்திற்கு அளிக்கவேண்டுமென்பது நியாயமா என்கின்றார்கள்?
ப. ச. க: உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கமாட்டீர்கள், ஆனால் உயர்சாதியினர் வரியினை மட்டும் அரசாங்கத்திற்கு அளிக்கவேண்டுமென்பது நியாயமா என்கின்றார்கள்?
ப & ந:
வகுப்புவாரியான இடஒதுக்கீடு வேண்டாம் பொருளாதார இடஒதுக்கீடுதான் வேண்டுமென்போர்
முதலில் கலப்புத் திருமணம் புரியெவேண்டும் என்கின்றனர்.
குறிஞ்சி:
குறிஞ்சியின் மூளை எனச் சொல்லப்படுவோரில் 3ல் 2சதவீதம்
கலப்புத்திருமணம் புரிந்தவர்களே, அதனால்
எங்களுக்கு அந்த தகுதி உண்டு என்பேன் :). ஆனால் வரி வசூலிப்பதை பற்றி மட்டும் யாரும் வாயைத் திறக்கவே மாட்டேன்கிறீர்களே :)
ப & ந : இந்தப் போராட்டமே ஆளும் மத்திய அரசினால்தான் தூண்டப்படுகின்றது, அவர்களே வண்டிகளை எரிக்கின்றனர் வன்முறை நடப்பதாக காட்டுகின்றனர்.
குறிஞ்சி: அது உண்மையெனில் மோடியை வழக்கமாக வாட்டி வதக்கும் பத்திரிக்கைகள், இந்த முறை அவர் வசமாக மாட்டியிருந்தபொழுதும் அதைப்பற்றி பேசாமல் இந்தியாவின் 100கோடி மக்களின் தலையாய பிரச்சினையான கள்ளக்காதலைப் பற்றியே அல்லும் பகலும் பேசியது ஏனோ???
இடஒதுக்கீடு ஏன் சர்ச்சையாகிறது?
இந்தியாவில் அரசாங்க பதவிகளில் கிடைக்கும் சம்பளம் பொதுவாக தனியார் துறைகளை விட அதிகம். மற்ற வளர்ந்த நாடுகளில் அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரே மட்டத்தில் இருந்தாலும், தனியார் ஊழியர்கள் கூடுதல்வேலை நேரம், போனஸ் போன்றவற்றின் காரணமாக அதிகம் சம்பாதிப்பர். சமீபத்தில் விவசாயம் வணிகம் போன்றவற்றை விட இந்தியாவில் எளிதாக பிரச்சினை ஏதுமின்றி 60வயது வரை சம்பாதிக்கும் துறையாக அரசாங்கத்துறை இருப்பதாலுமே இடஒதுக்கீடு பிரச்சினையாக மாறிவருகின்றது. இதற்குத் தீர்வு பிரதமர் கூறியவாறு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே....
இடஒதுக்கீடு குறித்து குறிஞ்சியின் நிலைப்பாடு:
சாதிய
வேறுபாடுகள் களையப்பட்டு இந்தியர்கள் அனைவரும் ஒன்று என்ற நிலை தோன்றிட
காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினை சார்ந்த மக்களினையும் பொது
நீரோட்டத்தில் இணைக்க இடஓதுக்கீடு எனும் கருவியை அன்றை ஆட்சியாளர்கள்
தேர்ந்தெடுத்தனர், சாதியக்
கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட கடைசி குடிமகன் இருக்கும் வரை இடஓதுக்கீட்டினை
சாதிய அடிப்படையில் கொடுப்பது நியாயமானது என்பதனை குறிஞ்சி முழுமனதோடு ஆதரிக்கிறது,
ஆனால்
அதன் முழுப்பயன் தேவையானவர்களுக்கு போய் சேருகிறதா என்பதிலும், ஜனநாயக
அரசில் வகுப்புவாரியான இடஒதுக்கீடு வர்க்கப் பேதங்களை அதிகப்படுத்தும் என்பதாலும், இடஒதுக்கீட்டினை
எவ்வளவு காலத்திற்கு நீடித்துக்கொண்டிருப்பார்கள் என்பதிலும்தான் நாம்
முரண்படுகின்றோம்.
முதலில்
பத்து வருடங்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும் என்றார்கள் இப்பொழுது ஏறக்குறைய 2025வரைக்கும்
நீடித்து இருக்கிறார்கள், காங்கிரசாவது
பத்து வருடங்களுக்கு ஒரு முறை நீடித்தது, அதனை
பாஜகவோ தனது முந்தைய ஆட்சியில் 25வருடங்களுக்கு
நீட்டித்து தனது
வாக்கு வங்கி அரசியலுக்கு பலம் சேர்த்தது.
சரி வஞ்சிக்கப்பட்ட
குலத்தில் பிறந்த அனைத்து
பேரும் இடஒதுக்கீட்டினைப் பயன்படுத்தி முன்னேறியிருக்கிறார்களா, இல்லையென்பேன் மாறாக தேவயானிகள் மாதிரியான
புதிய ஆதிக்க வர்க்கமே அவர்களூள் மலர்ந்தது. இந்திய வெளியறவு அமைச்சகத்தின் மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்த சர்ச்சைப்புகழ் திருமதி. தேவயானி அவர்களின்
தந்தை ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார், ஆனால் இந்தப் பெண்மனி இடஒதுக்கீடு மூலம் டாக்டர் படித்துவிட்டு பின்பு
அந்தத்துறையில் பணிபுரியாமல் IFSல் தேர்வு எழுதி இங்கு வந்தார் எனத் தகவல், ஆக
வகுப்புவாரியான இடஒதுக்கீடு புது பார்பனீயத்தியே ஏற்படுத்துகிறது... ஆக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனலாம்.
யார்
முதலில் இடஓதுக்கீட்டினை பெற்று முன்னேறினார்களோ அவர்களின் குடும்பங்களே இன்றும் மாறி மாறி
இடஓதுக்கீட்டினைப் பயன்படுத்தி முன்னேறுகின்றது, அதில் என்ன தவறு
என்கிறீர்களா, சரி
பார்ப்போம், முதலில் பின்தங்கிய சமூகத்தில் பிறந்த ஒருவர் தனது தலைமுறையில் படித்து பட்டம் பெற்று
இடஓதுக்கீட்டிலோ அல்லது மதிப்பெண் அடிப்படையிலோ அரசு அதிகாரியாக பணியில் அமருகிறார் என்போம். ஆக இன்றளவில் அவர் பொது
நீரோட்டத்திற்கு வந்து விட்டார், ஆக
எதிர்காலத்தில் அவரது வாரிசு அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் எளிதில் அறிய, பெற
முடியும், மாறாக
இன்னும் அதனை பெற முடியாத குடும்பங்கள் இவர்களோடு போட்டி போட முடியாமல்
பின்தங்குகிறது. புரியவில்லையா...
எமது
நண்பர் இடஓதுக்கீட்டில் வங்கிப் பணியில் சேர்ந்து இன்று தனது
கடும் உழைப்பின் மூலம் துணைமேலாளாராக உள்ளார். அவரது பெண்ணும் நன்கு படிக்ககூடிய பெண் என்றாலும், இடஓதுக்கீட்டின்
காரணமாக எளிதில் அதே வங்கியில் மேலாளராக எடுத்தஎடுப்பிலே பணியில் சேர்ந்தார். மற்றுமொரு நண்பரின் தந்தை
காவல்துறையில் எழுத்தராக(ஏட்டு) இருந்தார், நண்பரோ
இடஓதுக்கீட்டின் மூலம் காவல்ஆணையளாராக(SI) எடுத்த
எடுப்பிலே பணியில் சேர்ந்தார். ஆக ஒரே
குடும்பத்திடமே அந்த சலுகையின் மூலம் வாய்ப்புகள் போகத்தொடங்கிவிட்டது...
பொங்கி
எழாதீர்கள் சமூகஆர்வலர்களே, பொறுங்கள்
எமக்கு இடஓதுக்கீடு பற்றியோ இல்லை சாதிய பிரச்சினைகள் பற்றியோ ஆழ்ந்த கருத்துக்கள்
கிடையாது என்று பொத்தாம் பொதுவாக பேசிவிடவேண்டாம், எமக்கு பிறப்பு ரீதியிலான பாகுபாடுகளில் நம்பிக்கை என்றும் கிடையாது.
கதையல்ல இது எம் வாழ்க்கைச் சம்பவம்:
பத்தாம்
வகுப்பில் எமது இரண்டு வகுப்புதோழர்களே பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு
வேண்டுமென்பதற்கு எமது காரணமாகிப்போனர்.
இருவரில்
ஒருவன் பிராமணகுடும்பத்தில் வந்தவன், மற்றோருவன் தாழ்த்தப்பட்ட
சாதி என அடையாளப்படுத்தபட்டதிலிருந்து வந்தவன். இருவருமே பத்தாம் வகுப்பிற்கு பிறகு
படிப்பினை தொடர
முடியாமல் விட்டவர்கள்.????
முதலாமவனுக்கு
தாய் தந்தை இறந்துவிட்டனர், தாத்தாவின்
ஆதரவில் வளர்ந்து வளர்ந்து வருபவன், தாத்தாவோ கோயில்
அர்ச்சகர். இரண்டாமவனது தாய், தந்தையர் தோட்டியாக
உள்ளுர் நகரசபையில் வேலை செய்தனர். யார்
எதில் நன்கு படித்தனர் என்று
நீங்கள் சரியாக சொல்லிவிட்டால்தான் ஆச்சரியம்!! முதலாமவன் தேர்ச்சி பெருவதற்கே மூச்சு வாங்குபவன், ஆம்
இரண்டாமவன்தான் நன்கு படிப்பவன், மேலும்
கணக்கில் படுசுட்டி.
முதலாமவன்
நன்கு படிக்கமாலிருக்க காரணம் என்னவென்று மற்ற
இருவரும் வினவினோம். அதற்கு
முதலாமவன் அளித்த பதில், பள்ளி விட்டு வீடு சென்ற பிறகு புத்தகபையினை தொடவே
மாட்டானாம், தன்
முதிய வயது தாத்தாவுக்கு உதவி புரிய கோவிலுக்கு சென்றுவிடுவானாம்.
பத்தாம்
வகுப்பு இறுதி தேர்வில் முதலாமவன் தேர்ச்சி
பெற்றுவிட்டான் ஆயினும் படிப்பினை இனியும் தொடர முடியாது, என்
வயோதிக அர்ச்சகர் தாத்தாவினால் இதற்கு
மேல் என்னை தாங்க முடியாது என்றான், மனம்
கனத்தது. மேலும் இடஓதுக்கீட்டின் காரணமாக அவன் 90 முதல் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் அரசு வேலை சாத்தியமாகும் என்றான்
அதுவும் உண்மையே.
ஆனால்
இரண்டாமவனோ (412/500) 80சதவீதத்துக்கும்
மேல் மதிப்பெண் வாங்கி இருந்தும் தன்னாலும் இதற்கு மேல் கல்வி பயணத்தினை
தொடரமுடியாது, குடும்ப
பாரம் சுமக்க நான்
வேலைக்கு போகிறேன் என்றான். எவ்வளவு வாய்ப்புகள் உனக்கு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது என்ற
பொழுது அவன் கூறிய பதில் என்னுள் நிதர்சனத்தினை உணர வைத்தது. அவனது பதில், ஆம் நான்
பட்டம் வாங்க வேண்டுமென்றால் இன்னுமொரு ஐந்து வருடங்கள் ஆகும், அதன்
பிறகு போட்டி தேர்வுகள்
எழுத வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டொரு ஆண்டுகள் ஆகிவிடும் தேர்ச்சி பெற, சில
சமயங்களில் அரசாங்கம் போட்டித்தேர்வினையே நிறுத்திவிடுவார்கள், (ஆம் அவன்
கூற்று சரியே முந்தைய அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக போட்டி தேர்வு
நிறுத்தப்பட்டிருந்தது) அந்த சூழ்நிலையில் என்னால் என் குடும்பம் முழுதாக தடுமாறிப் போயிருக்கும், எனது
தந்தையினால் இதற்கு மேல் நான் கல்வி பெற உதவி புரிய அவரது உடல் நலம் இயலாது. ஆக
குறிப்பிட்ட காலத்திற்க்குள் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்பது நீ கூறிய வழியில்
சாத்தியம் குறைவு அதற்குள் என் தந்தை உருக்கலைந்து போயிருப்பார், மாறாக
இப்பொழுது நான் என் குடும்ப பாரத்தினை என் தந்தையோடு பகிர்ந்துகொண்டால் அவர்
கொஞ்சமாவது மூச்சு விடுவார், எப்படியும்
தொலைத்தூரக்கல்வியில் படித்து நீ கூறியதை அடைய முயற்சிக்கின்றேன் என்றான்
நம்பிக்கை மிளிர...
ஆக
இங்கு சாதீய அடிப்படையிலான இடஓதுக்கீடு என்பது இரண்டு பேருக்குமே உதவி புரிய
இயலவில்லை.. அதனால்தான்
பொருளாதார அடிப்படையிலான ஓதுக்கீடு இந்த பிரச்சினைக்கு சரிசமமாக தீர்வு அளிக்கும் என்கிறோம்.
இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்தினை தீர்மானிப்பது கடினம் எனும்
நண்பர்களுக்கு எமது பதில்,
முதலில்
நாம் அனைத்து சாதீயனரையும் உள்ளடக்கி அரசாங்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ்
போன்ற பதவிகளிலும், அரசின் அதிகாரிகளுள் A மற்றும் B தகுதிப்பிரிவுகளிலும், வங்கி
போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஓதுக்கிட்டின் காரணமாக பதவிக்கு
வருகிறர்வர்களுக்கு அவர்களது வாரிசுகளுக்கு அந்த சலுகை கிடையாது எனலாம். இதுவே ஏற்கனவே இடஒதுக்கீட்டினால் பயனடையாமல் கடைக்கோடியிலிருக்கும் தகுதி படைத்தவர்களை
மட்டும் இடஓதுக்கீட்டின் பலன் போய்சேருமாறு அமைத்திடும்.
வருங்காலத்தில்
அனைத்து பணபரிவர்த்தனைகளும் வங்கியின் மூலமே நடைபெறவிருப்பதால் நமது வருமானத்தின்
அளவும் வழியும் எளிதில் அறியலாம். ஆக மாற்றம் வரும் சமுதாயத்தில் உண்மையில்
ஒடுக்கப்பட்டவர்களுக்காக. யாம் வகுப்புரீதியிலான இடஒதுக்கீட்டினை எதிர்க்கவில்லை, ஆனால் வகுப்பு ரீதியிலான இடஒதுக்கீட்டினை விட வரக்க ரீதியிலான இடஒதுக்கீடே அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய உண்மையான சமத்துவ இந்தியாவை விரைவில் எட்டச் செய்யும் வழியாகும்.....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக