ஞாயிறு, 24 மே, 2015

குறிஞ்சியின் முகப்பக்க பகிர்வுகள் பகுதி - 3

இன்னிக்கும் நம்மள்ள பாதி பேருக்கு சோறு போடுறது விவசாயம்தான் மக்களே,

மேக் இன் இந்தியா திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை, ஆனால் விவசாயத்தின் அஸ்திவாரத்தினை ஆட்டிவிட்டு நிலங்களை தொழிலதிபர்களுக்கு சகாய விலையில் கொடுத்து கட்டற்ற மின்சாரமும் வரிச்சலுகையும் அளித்து அதன் மூலம் அற்புதம் நிகழும் எனப் பிரதமர் அற்புத சுவிசேசு கூட்டங்களை உலகம் முழுவதும் நடத்திக்கொண்டு வருவதையே எதிர்க்கிறோம்.
 





வளர்ந்த நாடுகளில் ஐந்து சதவீதத்திற்க்கும் கீழேயே மக்கள் விவசாயத்தினை தொழிலாக கொண்டுள்ளனர். 
இதுவே இந்தியா போன்ற நாடுகளில் 50சதவீதம். ஆக விவசாயத்தினை ஊக்குவித்து விவசாயியை சுயமுனைவோராக மாற்றுங்கள். மேக் இன் இந்தியா மூலம் மாதச்சம்பளம் வாங்கும் கூலிக்காரனாய் அல்ல...

தொழிலதிபர்களுக்கு மட்டும் கடனுதவிகள், கட்டற்ற மின்சாரம் வழங்கும் அரசாங்கம் விவசாய கடனுதவி ரத்து போன்றவற்றில் ஈடுபடும்பொழுது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் மக்களுக்காக செயற்படத்தவறினால் அதன் விளைவுகளை வரலாற்றில் விவாதிக்கநேரிடும்.   என்னடா நிகழ்காலத்தினை பற்றி பேசுவான்னு பார்த்தா வருங்காலம் பற்றி சொல்லுறானா, ஆமா பின்ன என்ன மக்களே புரட்சி வெடிக்கும் அது இது என்று எழுதினால் நம்மை புடிச்சி உள்ள போட்டுருவாங்க நக்சலைட்டு என்ற பெயரில்.... ஆமா திருப்பதிக்கு போனவனை புடிச்சி என்கவுன்டர்ல போட்ட  நாடுதானே இது, நமக்கு எதுக்கு பொல்லாப்பு
#wewantMADEININDIA மற்றும் MADEFORINDIA

இந்திய மாநிலங்களின் விவசாய வருமான விகிதாச்சாரம் ஒரு பார்வை. 
மத்தியபிரதேசம் ஆக அதிகமாக 33% வருமானத்தினை விவசாயத்திலிருந்து பெருகிறது. தமிழகம் 11.7% வருமானத்தினையே பெருகிறது.
ஜிஸ்டி வந்தால் பாதிப்பு தமிழகத்திற்குத்தான், தமிழக அரசின் வருமானத்தில் பெரும் வெட்டு விழும் ஏனெனில் தமிழகத்தின் வருவாயில் பெரும்பகுதி முறைசார்ந்த தொழில் மூலம் வரும் வருமானம் ஆகும், எனவே மத்திய அரசாங்கம் தமிழகத்தின் வருமானத்தின் பெரும்பகுதியை எளிதாக சாப்பிட்டுவிடும், ஏற்கனவே கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழக அரசிற்கு பெரும் நெருக்கடி வரும் காலங்களில் 
மாநிலங்களின் விவசாய வருமான விகிதாச்சாரம்

அதனால்தான் என்னவோ மோடிஜிக்கு இந்த விசயத்தில் மட்டும் அதிமுக எம்பிக்கள் மக்களவையில் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்திய வரிவிதிப்பு விகிதாச்சாரம் கடந்தகாலங்களில்

நேரடி வரி மற்றும் மறைமுக வரி கடந்தகாலங்களி



சந்தோசம் என்ற அளவீட்டில் நாம் 117வது நாடாகாத்தான் இருக்கின்றோம், இதுவே கடந்த வருடம் 111வதாக இருந்தோம்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் எல்லாம் நம்மை முந்தி உள்ளது...
மக்களின் வாங்குதிறன், ஜிடிபி, கருத்துசுதந்திரம் போன்ற காரணிகளை உள்ளடக்கியது இந்த அளவீடு...



அச்சேதின் ஆயே... என் நண்பர்கள் சொல்லலாம் இன்னும் சிலகாலம் கொடுக்கலாம் மோடிஜி செயல்பட, ஆனால் எம்மை பொருத்தவரையில் இந்த அரசாங்கத்திற்கு சாதகமாக ஆயில் விலை சரிந்தே உள்ளது, ஆனால் பொருள் விலையேற்றம் கட்டுக்குள் இல்லை..
பெரும் வியாபார சாம்ராஜ்யங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கப்பட நிர்பந்திக்கப்படுகின்றன, ஆனால் நாட்டின் முதுகெலும்பான விவசாய கடன் வட்டி ஏற்றப்படுகின்றது.
மோடி வந்தால் பாலாறும் தேனாறும் ஒடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் எங்களை விற்கவேண்டாம் என்றுதான் சொல்லுகின்றோம்.
நண்பர்கள் கேள்விகேட்கலாம் பின்னர் எப்படி வேலைவாய்ப்புகள் வருமென. இவ்வளவு சலுகைகள் வெளிநாட்டினருக்கு கொடுத்தபிறகும் சிலவருடங்களுக்கு பிறகு நம்மை விட சந்தையில் குறைவாக மனிதவளம் கிடைத்தால் அவர்கள் ஆப்பிரிக்காவிற்கோ இல்லை செவ்வாய் கிரகத்திற்கோ நடையை கட்டிவிடுவார்கள், ஆக நாங்கள் வேண்டுவது சுதேசி முயற்சிகளை ஊக்குவியுங்கள் என்றே, அதானி அம்பானிகளுக்கு மட்டுமின்றி குப்பனுக்கும் சுப்பனுக்கும் அரசின் கொள்கைத்திட்டங்களின் பயன் போகவேண்டும்.
முந்த்ரா திட்டத்தினை சொல்லலாம், ஆனால் நடைமுறையில் அதனை சாத்தியப்படுத்துவதிலே அதன் வெற்றி உள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் 5 முதல் 10லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் கடன் வாங்கலாம் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திருவாளர்.அருண்செட்லி அறிவித்தார்கள். ஆஹான்னேன்!!!
இப்போது என்னனா சிறு, குறு தொழில் பட்டியலிருந்து ஊறுகாய், சலவை உப்பு, கண்ணாடி வளையல், ஊதுபத்தி, தீப்பெட்டி, நோட்டுப்புத்தகங்கள், மேசை நாற்காலி செய்வது போன்றவற்றை நீக்கியுள்ளீர்கள்...  அப்புறம் நீங்க கொடுக்கிற 5 முதல் 10 இலட்சத்தினை வைச்சிக்கிட்டு அவன் என்ன அம்பானி பண்ணுற தொழிலயா பண்ண முடியும்.
கனடாவிலிருந்து நம் பாரதபிரதமர் கேள்வி எழுப்புகிறார், ஏன் கூகுளும், முகநூலும் இந்தியாவில் உருவாகவில்லை என்றார், அதனை நீங்கள்தானே உருவாக்கவேண்டும் ஐயா, நீங்கள்தான் குசராத்தில் பதினைந்துவருடம் முதல்வர், அங்காவது கல்வித்திட்டத்தில் மாற்றத்தினை கொண்டுவந்திருக்கலாம். பேசுவதை நிறுத்துவோம், செயற்படுவோம்.
நம் தேசத்தின் எளிய, இளைய சுயமுனைவோர்களை ஊக்குவிப்போம்... பின்பு நிச்சயம் இந்த அளவீட்டில் இந்தியா முன்னேறும்.

புறம்போக்கு எனும் பொதுவுடமை:
பட ஆரம்பத்தில் வரும் காட்சிகளில் புரட்சிகர ஆர்யா பெரிதாக நம்மை ஆக்கிரமிக்கவில்லைகடைசி நிமிடங்களில் வரும் தூக்குகைதியாக பொதுவுடமைவாதியாக ஆர்யா நம் மனதை கவர்ந்துவிடுகிறார்.
சாம் மிடுக்குடன் போலிஸாக அரசாங்கத்தின் குரலாக வருகிறார்.
விஜய்சேதுபதி ப்பாஆ சான்சே இல்லை. கடைசி 15நிமிடங்களில் ஆட்கொண்டுவிடுகிறார். எது நடந்தாலும் அப்பாவிதான் பாதிக்கப்படுவான் என்பது போன்ற முடிவுடன்.
இரண்டாம் பகுதியின் காட்சிகள் நெகிழ்வுத்தன்மையுடன் ஈர்க்கிறது. முதல் பகுதியில் பிரம்மாண்டமாக வரும் சில காட்சிகள் திணிக்கப்பட்டவையாகவே தோன்றுகிறது.

தாராளமாய் பார்க்கலாம் திரு. ஜனநாதனின் படமாகவே...
- சினிமாக்காரன்
#பொதுவுடமை எனும் சித்தாந்தம் தோற்கவே போவதில்லைபொதுவுடமைவாதிகளாக தோன்றும் போலிசித்தாந்திகளால் அது சிறிய பின்னடவை சந்தித்திருக்கலாம் அவ்வளவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக