புதன், 17 டிசம்பர், 2014

விமானத்தினுள்ளே அறிவிப்புகள் இனி தமிழிலும். தரணியெங்கும் தமிழ் பாயட்டும்…

பள்ளியில் திருவள்ளுவர் தினம், பாரதி தினம், சூப்பர்ஸ்டாருக்கு தமிழில் வாழ்த்து என அசத்தும் மோடி சர்க்காரின் மற்றொரு முயற்சியா என்றுதானே நினைக்கிறீங்க, ஸ்ஸ்.. கொஞ்சம் பொறுங்க இங்கிட்டு கதை வேறு.

கடந்த வாரம் நமது நண்பர் ஒருவர் பணி நிமித்தமாக சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு டைகர் ஏர்வேஸ் எனும் தனியார் விமானத்தில் சென்றிருந்தார், அப்பொழுது அவ்விடத்தில் அவருக்கு கேட்டது இனிய அதிர்ச்சிஆம் அவ்விமானத்தில் அவர் கேட்டது தமிழில் விமானத்தின் அறிவிப்புகள்


இந்தியாவின் மைய அரசாங்கத்தினால் பலவருடங்களாக நடத்தப்பட்டு வரும் ஏர் இந்தியா விமானத்தில் தமிழில் மட்டுமல்ல மற்றைய மாநில மொழிகளிலும் அறிவிப்புகள் செய்ய முடியாது என்றும், அது தேவையில்லாத அசௌகரியங்களை நிர்வாகத்தில் ஏற்படுத்தும் என்றும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டைகர் ஏர்வேஸ்ன் மத்திய தலைமை அலுவலகம் ஆஸ்திரேலியாவிலிலும், அவர்களது பிராந்திய தலைமை அலுவலகம் சிங்கப்பூரிலும் உள்ளது. ஒரு வெளிநாட்டாரால் நடத்தப்பட்டு வரும் விமான நிர்வாகத்தினால் அதனை செவ்வனே செய்ய முடியுமானால்

இந்திய அரசாங்கத்தினால் செய்யமுடியாது என்று சொல்வதை என்னவென்று சொல்வதம்மாமனம் இருந்தால் மார்க்கமுண்டு.. என்ற பழமொழி நினைவுக்கு வருவதை தடுக்கமுடியவில்லை.. உங்களிடையே ஹிந்தியும், சமஸ்கிருதமும் புனித மொழியாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. நான் என்ன கரடியாக கத்தினாலும் உங்களுக்கு எங்கிட நியாயம் புரியப்போவதில்லை.

தமிழானது புழக்கத்தில் மிச்சமிருக்கும் தொன்மையான மொழியும் கூடஅதனை காப்பற்றுவது நமது கடமையும் கூட.. இதனை சொல்வதால் நான் தமிழ் வெறியன் அல்ல, தமிழின் பால் அன்பு கொண்டவன்; ஹிந்தி மொழியில் அடிப்படை கத்துக்கொண்டவன்; பலமொழிகள் கத்துக்கொள்வதில்  தப்பில்லை என்ற கருத்தியில் கொண்டவனும் கூட.

ஒருவருக்கும் புரியும் மொழியில் பேசினால் அது அவர்தம் புத்தியில் ஏறும்.
அதுவேஅவர்தம் தாய்மொழியில் பேசினால் அவரது இதயத்தில் நிலைக்கும்
நெல்சன் மண்டேலா.

டைகர் ஏர்வேஸ் நிறுவனம் இதனை பரிர்சார்த்தமாக சென்னை மற்றும் திருச்சி வழித்தடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வரவேற்றோ ஆலோசனை கருத்துக்களையோ அவர்களது வெப்சைட்டில் பதிவிடலாம். ஏனுங்க எங்க போரீங்க அதுக்குள்ள, டைகர் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வாழ்த்து  தெரிவிக்கவா.. நம்முடையதையும் சேர்த்து தெரிவியுங்கள்

பச்சபுள்ள மன்னாரு: மோடி சர்க்கார் என்னை மாதிரியான எளிய மனிதர்களும் விமானத்தில் பயணம் செய்வார்கள், எங்களுக்கும் புரியும் வகையில் சேவையானது இருக்குமாறு செய்யுங்கள்தேர்தல் நேரத்தில் உங்களது வெப்சைட்டில் கூட தமிழிலேயே பதிவுகள் வந்ததுஏதோ நியாபகம் வந்தது சொன்னேன் புரிந்தால் சரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக