குறிஞ்சி எப்பொழுதுமே
அந்நிய முதலீட்டை எதிர்த்தே வருகிறது. இந்தியர்களால் செயற்படுத்த முடியாத, வெற்றி பெறாத
துறைகளில் வேண்டுமானால் அந்நிய நிறுவனங்களையும், முதலீட்டினையும் வரவேற்கலாமே ஒழிய,
பெட்டிக்கடைகளுடன் போட்டிபோடவும், காபிக் கடைகளுடன் போட்டி போடவும் வால்மார்ட் முதல்
ஸ்டார்பக்ஸ் வரை சிகப்பு கம்பளம் விரிக்காமல் இருந்தால் நலம் என்போம்.
இந்த
வரிசையில் முந்தைய கட்டுரையை படிக்க தவறியிருந்தால்...
நமது வாதமே இந்த
தேசத்தில் தேவையான செல்வம் கனிமங்களாகவும் நிதியாகவும் நம்மிடையே குவிந்துள்ளது, அதனை
முறைப்படுத்தி செயற்படுத்தினால் வெற்றி பெறலாம் என்றே கூறி வருகிறோம்.
நமது வாதம் சரிதான்
என்பதனையே பின்வருடம் வரைபடம் விளக்குகிறது.
இது REMITTANCE,
FDI மற்றும் FII ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தினை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. பாமரனாகிய எனக்கே ரெமிட்டன்ஸ் மூலமே நமது செல்வம்
குவிகின்றது எனப் புரிகிறது, டீமாஸ்டரான நம்ம பிரதமருக்கு புரியாமலா போகும். புரியும்
ஆனா புரியாது.
ரிமிட்டன்ஸ் மூலமாக
வந்த பணம் FDI மற்றும் FII மூலமாக வந்ததைவிட இருமடங்கு.
REMITTANCE என்றால்
என்ன?
வெளிநாட்டு வாழ்
இந்தியர்களால் தங்களது குடும்பத்தினருக்கு அனுப்ப்படும் அவர்களது சம்பாத்தியம், இந்திய
சந்தையில் குவிகின்றது. இது ரியல் எஸ்டேட்
சந்தைகளிலும், ஆபரணங்களாகவும், பணமாகவும் சொத்து சந்தையில் மாற்றமடைகின்றது. மேலும்
அவர்களது குடும்பத்தினரால் அது செலவு செய்யப்படுவதால் இந்திய நிதி நிர்வாகம் மறைமுகமாக
முன்னேறிச் செல்கின்றது. இது பரவலாகவும் சிறிய அளவிலும் இருப்பதால் நேரடியாக மாற்றத்தினை
உணரமுடியாது.
கேரளா போன்ற சிறிய தொழிற்துறை
ஏதுமில்லாத மாநிலத்தில் செல்வ செழிப்பு எப்படி வந்தது என்று பார்த்தால், அப்பொழுது
புரியும் ரிமிட்டன்ஸின் செல்வாக்கு எப்பூடினு!
சேட்டன்கள் பாலைவன
தேசங்களில் வேலை பார்த்து அனுப்பும் பணமே கடவுளின் தேசமாக கேரளாவை மாற்ற ஒரு காரணியாகும்.
FDI (FOREIGN DIRECT INVESTMENT) என்றால் என்ன?
வெளிநாட்டு நிறுவன்ங்கள்
இந்தியாவில் நேரிடையாகவும், இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தும் மூதலிட்டினை
தொழிற்துறையில் இறக்குவதே ஆகும்.
எ.கா:
HYUNDAI – அந்நிய
நேரடி மூதலீடு
MARUTHI
SUZUKI – இந்திய அந்நிய கூட்டு முதலீடு
FII (FOREIGN INSTITUTIONAL INVESTOR) என்றால் என்ன?
வெளிநாட்டு வாழ்
நபரோ, நிறுவனமோ இந்திய சந்தையிலோ, நிறுவனத்திலோ பங்குகளில் முதலீடு செய்வதாகும்.
FDI-ல் செய்யப்படும்
முதலீட்டினை அவ்வளது எளிதாக எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் FII-ல் செய்யப்படும் முதலீட்டினை
முதலீட்டாளர்களால் லாபமாக ஒரே நாளில் எளிதில் உருவிச்செல்லமுடியும், ஆகவே FII-ஆனது ஆக மோசமானது.
சரி இப்ப நம்ம
மேட்டருக்கு வருவோம்.
மோடிஜி அந்நிய
முதலீட்டினை குவித்து விடவேண்டும் என “மேக் இன் இந்தியா” அறைகூவல் விடுத்தார். ஆனால் நமது அறைகூவலோ “மேட் இன் இந்தியாவாக” இருக்கவேண்டும்
என்பேன். அதுவே நாளடைவில் வெற்றியை தரும். இன்று சீன நிறுவனங்கள் உலகம் முழுவதுமுள்ள
மற்ற தேசத்தில் முதலீடு செய்வது என்பது “மேட் இன் சீனாவினால்” வந்ததே ஒழிய “மேக் இன்
சீனாவால்” வந்தது அல்ல.
நேருவின் நாளைய
கண்ணோட்டமே இன்றைய நவரத்தின, மகாரத்தின நிறுவனங்களான கெயில், LIC போன்றவையாகும். ஆக
மோடியே உண்மையை உணருங்கள், அரசாங்கம் என்பது மக்களின் கருத்துக்களால் உருவாக்கப்படவேண்டுமே
ஒழிய அதிகாரிகளால் அல்ல என்பதை முடிவு செய்யுங்கள். இது மோடிக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் சேர்த்து புரியவேண்டும்.
இந்தியர்கள் வெளிநாட்டில்
சம்பாதித்து ரிமிட்டன்ஸ் மூலம் இந்தியாவிற்குள் செலுத்தும் பணத்தினை முறைப்படுத்தி, NRIக்களுக்கு வங்கி மூலம் தகுந்த வட்டியினையோ அல்லது
பங்குகளையோ அளிக்கும் பட்சத்தில் தொழிற்சாலைகள்
துவங்க தேவையான பணத்தினை அரசாங்கம் எளிதில் திரட்டலாமே…


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக