வெள்ளி, 3 அக்டோபர், 2014

கவிதை சாரல் தொகுதி - 1




பயிற்சி:
மூட்டை துாக்கியாவது
பிழைத்துக் கொள்ள
இப்போதே
பயிற்சி - குழந்தைகளின் புத்தகச் சுமை



சேமிப்பு:
இலவசமாய்க் கிடைக்கும்
எதையுமே சேமிக்க மாட்டோம்..
அதனால்தான்
காலகாலமாகச் 
சூரிய ஒளியைச்
சும்மா
விட்டு வைத்திருக்கிறோம்.


தனி வழி..
ஐந்து
வயதுக் குழந்தையை
அடித்து உதைத்து
அதைப் பாடு இதை நடி என்போம்
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு
தினக்
கொண்டாட்டப் பரிசு
உனக்கே உனக்கு என்று.

நியாயம்?
பெண்களுக்கெதிரான
கொடுமைகளை
எதிர்க்கும்
கோலாகல விழா..
தொடைவரை கிழிக்கப்பட்ட
துகிலுடன்
வந்தாள்
விழா
நாயகி.
காமராக் கண்களிலும்
காமம்.

நியாய விலைக்கடை:
மக்கள் வெகு
அமைதியாய்க் காத்திருக்கும்
ஒரே இடம் -
நியாய விலைக்கடை
செங்கல்
தகரம்
அனைத்தும்
மக்களின் பிரதிநிதிகளாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக