திட்டம்
எளிதாகச்
செயல்படுத்த
எல்லாரும்
எடுத்துக் கொள்ளும்
நமக்கு
நாமே திட்டம்
கவிஞன்
என்னும்
பட்டம்!
முன்னேற்றம்
முன்னால்
உட்கார்ந்திருப்பவனிடமும்
கூட
முகநுால்
வழியாகத்தான்
பேசுவோம்
என்கிற
அளவுக்கு இருக்கிறது
எங்கள்
முன்னேற்றம்!
ஆட்சி்த்
திறம்
ஆட்சியைப்
பிடிப்போம்
என்று சொல்கிறவர்கள்
இருக்கிறவரை
நல்ல
ஆட்சியைக் கொடுப்பவர்கள்
கிடைக்க
மாட்டார்கள்!
தகுதி
கல்வித்
தந்தையர்
பலர்
கைநாட்டாய்
இருந்து
கொண்டு
கட்டித்
தள்ளுகிறார்கள்
கல்விக்
கூடங்களை!
பத்தியம்
அளவோடு
பத்தியம்
அவசியம்
என்பதைத்தான்
தாம்
பத்தியம்
என்றார்கள்
தக்கோர்!
பகுத்தறிவு
பால்குடம்
மண்சோறு
அலகு
குத்தல்
காவடி -
பகுத்தறிவுத்
தொண்டர்களின்
பரிணாம
வளர்ச்சி!
கணினிக்
கூற்று
தமிழின்
முதல்
இஃப்
ஸ்டேட்மென்ட்
பெண்ணிற்
பெருந்தக்க யாவுள
(இஃப்)
கற்பெனும்
திண்மை
உண்டாகப்
பெறின்
இரசிப்பு
நிழல்களை
நிசம்
என்று நம்பி
அடுத்த
படம்
வரும்வரை
அத்தனையையும்
கொடுத்து
ஏமாளிகளாகும்
எங்கள்
இரசிகர்கள்!
நேரம்
மருத்துவரைப்
பார்க்க
மணி கேட்டேன்
நள்ளிரவில்
நேரம்
ஒதுக்கினார்
நலவாழ்விற்கு
வழிகேட்டேன்
உரிய
நேரத்தி்ல்
உறங்கச்
சொன்னார்
கூட்டுப்
பிழை
பள்ளி
அறைகளைப்
பள்ளியறைகளாக்கும்
படுபாவிப்
பயிற்றுவிப்பாளர்கள்!
பரிதவிக்கும்
பாலினம்!
கால
மாற்றம்
முன்பு
கெட்டிச்
சாயம்
இப்போது
சாயம்
வெளுத்துப்
போனதாய்
விவசாயம்
சுமை
வருத்தப்பட்டுப்
பாரம்
சுமக்கிறவர்களே
என்னிடம்
வாருங்கள்
நான்
மேலும்
பாரம்
தருவேன்
-
பன்னாட்டு
நிறுவனங்களின்
பாசக்கார
மேலாளர்கள்!
கேளுங்கள்
கொடுக்கப்படும்
ஊதிய
உயர்வு
கேட்ட
உழைப்பாளிகளுக்கு
உயர்த்தித்
தந்தது நிர்வாகம்
வேலை
நேரத்தை
போராட்டம்
கிடுகிடு
போராட்டங்களை
அறிவிப்பவர்கள்
எல்லாம்
குடுகுடு
கிழவர்களே!
மறைக்காதே
மருத்துவர்களிடம்
எதையும்
மறைக்கக்
கூடாது
முக்கியமாய்
”மணி”
ப் பர்சை!
நடிப்பு
நன்றாக
நடிக்கிறார்கள்
அடுத்த
முதல்வர்
ஆவதற்கு
ஆசையே
இல்லை
என்று!
நல்ல
வழி
நண்பர்களைக்
கழற்றி
விட
நல்ல வழி
இரண்டு
ஒன்று
-
அவர்களிடம்
கடன் கேள்
இரண்டு
-
அவர்களுக்குக்
கடன் கொடு
-சுப.தனபாலன்
-சுப.தனபாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக