சனி, 5 ஜூலை, 2014

என்னப்பா நடக்குது இந்தியாவில் - பகுதி 7

ஆந்திராவில் 15 பேரை காவு வாங்கிய கைல் பைப்லைன் விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள்... இந்த கைல்(GAIL)தான் காரணமேயில்லாமல் தமிழகத்தின் விவசாயநிலங்களை அபகரிக்கத் துடிக்கிறது. 






இ​ந்த திட்டத்தின் தற்போதைய பயனாளிகள் வரைவில் தமிழக நகரங்கள் எதுவுமில்லை என்ற பொழுதில் பெங்களூருக்கு எடுத்து செல்வதற்காக தமிழக விவசாய நிலங்கள் பயன்படுத்துவதில் எந்த உள்நோக்கமும்மில்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஆளும் வர்க்கத்திற்கு உண்டு. மங்களூரிலிருந்து பெங்களூருக்கு சாலை வழி தொலைவே 356கிலோமீட்டர்தான் இருக்கிறது. அதுவே கேரளாவின் கூட்டான்டுவிலிருந்து தமிழகத்தின் கோயமுத்தூர் வரை 120 கிலோமீட்டரும் பின்பு குறிப்பாக தமிழக எல்லைக்குள்ளே விவசாய நிலங்கள் ஊடே பெங்களூர் வரை எடுத்துச்செல்லும் தொலைவு 310கிலோமீட்டரும் உள்ளது, ஆக மொத்த தொலைவு ஏறக்குறைய 430கிலோமீட்டர் ஆகும். 


​கேரளாவின் வடமாவட்டங்களின் எதிர்ப்பு காரணமாக மங்களூருக்கான இணைப்பு பெங்களூர் வழியே நடத்த முயற்சி இருந்ததாக தகவல் அப்படியெனில் தமிழகம் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறதா.

இ​து ஏதோ கொங்கு மண்டலத்தின் பிரச்சினை என்று வழக்கம் போல் இருந்து விடாதீர்கள் தமிழர்களே. 2014-15ல் எண்ணூர்  துறைமுகத்திலும் இயற்கை வாயு இறக்குமதி நிலையம் கட்டப்பட்ட பிறகு, ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணூரிலிருந்து  தூத்துக்குடிக்கும் மற்றும் இந்தியன் ஆயில் எண்ணூரிலிருந்து மதுரைக்கும் என இரண்டு நிறுங்னங்களும் தமிழகத்தின் ஊடே பிரதானமாக இருவேறு வழிகளில் இயற்கை வாயுவை எடுத்து செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனால்தான் கெயில் பிரச்சினையில் சம்பந்தமே இல்லாவிட்டாலும் தமிழக நிலங்களை விட ஆளும் வர்க்கம் மறுக்கிறது. கொங்கு மண்டலத்தினை விட்டுவிட்டால் இந்த எதிர்ப்பு மற்ற பகுதி விவசாயிகளிடையும் பரவிவிடும், ஆக எங்குமே இவர்களால் இயற்கைவாயுவை தமிழக விவசாய நிலங்கள் ஊடே எடுத்துச்செல்லமுடியாமல் ஆகி விடும் என்பதே ஆளும்வர்க்கத்தின் அச்சம்.  


2015 இயற்கை வாயு தமிழக இணைப்பு திட்ட வரைபடம்

இ​தற்க்கும் வியாக்கியானம் பேச நம்மிடையே நண்பர்கள் உண்டு, எப்படி வளர்ச்சி வரும் அது இது என்று. ஏனென்றால் கூடங்குளம் முதல், தேனி நியுட்ரினோ, தஞ்சை மீத்தேன் திட்டங்கள் வரை ஆதரித்த உத்தமர்கள் உண்டு இங்கு. அது சரி அவர்களுக்கு வராதவரை அது ரத்தமல்ல தக்காளி சட்னிதானே.. போகட்டும் என்றாவது அவர்களது வீடு மவுலிவாக்கம் சம்பவம் போல் இடி இடித்து விழாதவரையில் நமது சத்தம் அவர்களுக்கு செவுடன் காதில் ஊதின சங்குதான். சரி சரி நமது நண்பர்கள்தானே நன்றாக வாழ்ந்து விட்டு போகட்டும்.

​வளர்ச்சி வேண்டும் அதற்காக தொழிலதிபர்கள் லாபம் கொழிக்க விவசாய நிலங்களும், பொதுமக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்படாமல் மாற்று வழியில் கொண்டு செல்லவேண்டும் என்பதே குறிஞ்சியின் விண்ணப்பம் சம்பந்தபட்டவர்கள் கவனிப்பார்களா.

இ​ந்தியாவிலிருந்து உலக பராம்பரிய இடங்கள்:
UNESCO WORLD HERITAGE LIST
உலக பராம்பரிய நினைவு இடமாக ராணி-கா-வாவ் குஜராத்திலிருந்தும்இமாலயன்  தேசிய பூங்காவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இ​ந்தியாவிலிருந்து 2014வரை 32 இடங்கள் இடம்பிடித்துள்ளது. 


இந்தியாவில் யுனெஸ்கோவின் உலக புராதான இடங்கள்

பட உதவி: விக்கிபீடியா

ஆப் கீ பார் மோடி சர்க்கார், ஆப்படிக்கிறதா தமிழர்களுக்கு...

தமிழகத்தின் எல்லைக்குள்ளே வராமல் செல்லும் அதிவேக விரைவு தொடர்வண்டி (புல்லட் டிரெயின்); இது எவ்வளவு முக்கியமான திட்டம், இதன் திட்ட வரைவிலே நாம் இல்லாதது நமக்கு மிகப்பெரிய பின்னடைவு. இதற்கு மோடி மட்டும் பொறுப்பல்ல, ஜெயா அம்மையாரும்
 இந்த திட்டத்திற்காக போராடி தமிழகத்திற்கென இதில் பங்கு கொண்டுவரவேண்டும், குறைந்தபட்சம் சென்னை முதல் கோவை வரை அல்லது சென்னை முதல் மதுரை வரை இந்த திட்டத்தினை அமல்படுத்தலாம்.

புல்லட் ரயில் திட்டம்

இலவச தப்பு தப்பு,  விலையில்லா பொருளுக்கென ஒதுக்கும் பணத்தை நிறுத்தி விட்டு இந்த மாதிரியான எதிர்கால நலனுக்கான திட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பினை உறுதி செய்தால் மத்திய அரசினை எதிர்பாராமல் விரைவில் அந்த திட்டங்களை நிறைவேற்றலாம் ( குறிப்பு: கேரளாவில் மாநில அரசின் பங்கும் புல்லட் ரயில் திட்டத்தில் இருப்பதாக தகவல், கர்நாடக மாநில அரசு பொதுவாகவே கடந்த சில வருடங்களாக ரயிலுக்கென மாநில நிதிநிலை அறிக்கையில் ஒரு பங்கினை ஒதுக்குகிறது.  அதனாலும்தான் அங்கு அதிக ரயில் திட்டங்கள் அமலுக்கு வருகின்றது.)  

மோடி vs மாநில மொழிகள்:
மோடியின் தனிப்பட்ட வலைத்தளம் தமிழிலும் வழங்கப்படுகிறது, இது குறித்து தமிழக பிரச்சாரத்தின் போது மோடியும் பெருமையுடன் அவரது வலைத்தளமானது மாநில மொழிகளில் முதலில் தமிழில்தான் வழங்கத் துவங்கியது  என்றார். ஆட்சிக்கு வந்த பிறகு காட்சி மாறுது, பழச அதுக்குள்ள மறக்காதீங்க, இப்பொழுது இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கினால் வரும் காலத்தில் வரலாறு மாறும் எச்சரிக்கையுடன் கையாளுங்கள் மொழியை இது இருபுறமும் பிடிமானமற்ற கத்தி.... கவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக