வெள்ளி, 20 ஜூன், 2014

​குறிஞ்சியின் சுட்டிக்காட்டலுக்கு தமிழக அரசின் சார்பு அமைப்பு எடுத்த நடவடிக்கையா??

​      கடந்த 2013 ஆகத்து 3ல், நண்பர் ஒருவர் தமிழக அரசின் வலைதளத்தில் உள்ள வரைபடமானது ஆங்கிலத்தில் இருந்ததாகவும் அதை அவர்களுக்கு சுட்டிக்காட்டி தமிழில் மாற்றச்சொல்லி முயன்றதாகவும் ஆனால் அந்த வலைதளமானது அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று நமக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்.  நாமும் அந்த வலைதளத்திற்கு சென்று அவர் கூறியதை உறுதிபடுத்தினோம்.  ஆனால் கடவுள் கிருபையினால் அந்த வலைதளத்தின் மின்னஞ்சல் பகுதி நாம் சென்றபொழுது வேலை செய்தது,  ஆகவே சம்பந்தபட்டவர்களுக்கு மின்னஞ்சல் செய்ததோடு அதையே இங்கு பதிவும் செய்திருந்தோம், அந்த பதிவினை தவறவிட்டவர்கள் பின்வரும் சுட்டியை சுட்டி பார்க்கலாம்.


​பின்பு குற்றம் கூறுவதோடு நின்றுவிடாமல் நாமும் நம்மால் ஆன பங்களிப்பை செய்யலாமே என அந்த வரைபடத்தினை தமிழில் மாற்ற நமது அரைகுறை கணிணி அறிவை உபயோகப்படுத்தினோம். ஆனால் அது முழுதாக வரவில்லை மேலும் வேறு சில பணிகளும்,தேர்தல் பதிவுகளும் நமது கவனத்தினை அதிலிருந்து திசைதிருப்பியது. தவறுதான்.

ஆ​னால் நமது அந்த நண்பர் விக்கிரமாதித்தன் வேதாளத்தினை சுமந்த கதை மாதிரி தொடர்ந்து முயன்று வேறு ஒரு தமிழக அரசின் வலைத்தளத்தினை எடுத்து தந்தார். அதில் முழுதும் தமிழிலே மாவட்ட அளவிளான வரைபடங்களும் இருந்தது. அதற்கு சம்பந்தபட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இது கடந்த முறை நமது கண்ணில் அகப்படவில்லையா இல்லையெனில் இது புதிதாக உருவாக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எது எப்படியோ தமிழ் வளர்ந்தால் சரி,  அந்த வலைத்தளத்தில் உள்ள ஒரே குறை அதில் குறிப்பிட்ட எழுத்துருக்கள் இருந்தால் மட்டுமே நன்கு வேலைசெய்கிறது.  யுனிகோடில் இருந்தால் அந்தக் குறையும் இருக்காது, இதுவும் விண்ணப்பமே! சம்பந்தப்பட்டவர்கள் ஆவணசெய்வார்களா?




"Question ​கோயிந்து":  ஏம்பா உனக்கு இந்த சுயவிளம்பரம்...பதினைந்து நாள் நாரயணசாமி இல்லாத குறையை போறப்போக்குல நீ  திர்த்துவிடுவோயோ :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக