ஏற்கனவே இது முகப்பக்கத்தில் வந்ததுதான், ஏற்கனவே பார்த்தவர்கள் எரிச்சலடையவேண்டாம், தவிருங்கள். :)
புனேவில் குறிப்பிட்ட மத அமைப்பினரால் இளைஞர் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஃபேஸ்புக்கில் வீரசிவாஜி மற்றும் பால்தாக்கரே பற்றி அவதூறாக பதிந்தார் என்ற சந்தேகத்தில் புனேவில் குறிப்பிட்ட மத அமைப்பினரால் இளைஞர் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்போது அவருக்கும் அந்த ஃபேஸ்புக் அவதூறுகளுக்கும் தொடர்பில்லை என்று செய்தி வருகிறது. அவர் அத்துமீறியிருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதை விடுத்து பிறர் சட்டத்தை கையில் எடுப்பதை நாம் மதரீதியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நம் கருத்து சுதந்திரம் பறிபோவதையும் வேடிக்கைதான் பார்க்கவேண்டியிருக்கும். தற்போது அந்த அமைப்பின் தலைவர் உட்பட பதிமூன்று பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழா... நீ தண்ணீருக்கும் சோறுக்கும் சண்டை போட்டு சாவுடா...!
காவிரி நீர் திறந்துவிடுவதைத் தடுக்க கர்நாடகா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பலமான எதிர்ப்பை பதிவு செய்கிறது. அந்த மாநிலத்து மத்திய அமைச்சர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுக்க எல்லாவிதமான முயற்சியும் செய்வார்கள் என்று நன்றாகத்தெரிகிறது.
இங்கே இன்னும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், சில நூறு ரூபாய்களுக்கும் கழகங்களுக்கு ஓட்டு போடும் தமிழா... நீ தண்ணீருக்கும் சோறுக்கும் சண்டை போட்டு சாவுடா...!
இன்னும் 5 வருடங்களுக்கு காங்கிரஸில் இன்னும் என்னென்ன நடக்குமோ...?
சசிதரூர் ஒரு வெளிநாட்டு இணையதளத்தில் 'தேர்தலுக்கு பிறகான மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளது' என்று கட்டுரை எழுதுகிறார். சோனியா தேர்தலுக்கு முன் டெல்லி இமாமை சந்தித்தது தேவையற்றது என காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு எழுந்து அடங்குகிறது. ராகுலை விமர்சித்து நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். ம்ம்ம்... இன்னும் 5 வருடங்களுக்கு காங்கிரஸில் இன்னும் என்னென்ன நடக்குமோ...?
அலையின் நர்த்தனங்கள்
அரபிக்கடலில் கடந்தவாரம் மும்பையிலிருந்து 800கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த புயலால் மும்பையில் கடல் அலைகள் ஆர்ப்பரித்தது. பின்னர் அந்த புயல் ஒமனை நோக்கி நகரத்தொடங்கியதால் மும்பை நிம்மதி பெருமூச்சு விட்டது, இருப்பினும் அலையின் நர்த்தனங்களை பார்த்துவிடலாமே வாருங்கள்...







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக