புதன், 18 ஜூன், 2014

தமிழ்தான் நம் அடையாளம்!


நாம் விட்டுச்செல்லும் சொத்து நம் குழந்தைகளுக்கு...
நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தின் பராம்பரியமும், பெருமையும் அடுத்த தலைமுறைக்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்றே விரும்புகிறோம். எதனால்...? அது அவர்களுக்கு பல நேரங்களில் அவர்களது சவால்களை எளிதாக்கும் என்பதே காரணம். இன்னார் பையன், இன்னார் வீட்டு பெண் என்ற அறிமுகம் சமூகத்தில் நமது அடையாளத்தினை தனித்து நிற்கச் செய்யும். நமது வேலையை சுலபமாக்கும்.
அதுபோலவே தமிழ் நமது அடையாளம் மட்டுமல்ல அது நமது பராம்பரியமும், பெருமையும் கூட. ஆதி முதல் நீடித்து நிற்கும் வெகு சில மொழிகளுள் ஒன்று தமிழ்; அதனை நாம் நமது தலைமுறையோடு குழி தோண்டி புதைத்திட விரும்புகிறோமா...? முதல் மொழியாக நாம் தமிழை படிக்காவிட்டால் வேறு யார் படிக்கவிரும்புவார்கள். இது நமது கடமையல்லவா.... வேண்டுமானால் நீங்கள் இரண்டாம் மொழி, மூன்றாம் மொழியாக ஆங்கிலம் முதல் இன்னும் கண்டேபிடிக்காத கிரக மொழியெல்லாம் கூட படியுங்கள். ஆனால் முதல் மொழி தமிழே...
கல்வியாளர்களா கல்வித்தந்தைகள்...? தாய்மொழியை கற்பிக்கவிரும்பாத இவர்கள் இது வரை வெறும் வியாபாரிகளாக இருந்தார்கள், இப்பொழுது முழுதும் தொழிலை மாற்றுகிறார்கள். அதற்கு வேசித்தொழிலே மேல் என்பேன்...
நேற்று வடக்கத்திய தனியார் டிவியில் வந்த பேட்டியில் ஒரு சிறுவன் வீட்டில் தமிழ் பேசுகிறாராம், அதனால் பள்ளியில் தமிழ் படிக்க போர் அடிக்கிறது என்கிறார். அவரது வயதினால் அவரை விமர்சிக்க விரும்பவில்லை. ஆயினும் அவருக்கு அனுபவம் என்பது குறைவு. ஆயினும் இங்கு பிணம் தின்னும் கழுகாய் நான் சொல்ல நினைப்பது அந்த டிவி நிர்வாகத்தினரைத்தான். எவ்வளவு வன்மம் தமிழ் மீது.
ஆங்கிலத்தில் இருக்கும் சரக்கும் இன்னும் தமிழில் இல்லை என்று பிதற்றுவோர்களுக்கு நான் சொல்லவிரும்புவது. சம்பளம் வாங்கிவிட்டு பாதி வாத்தியார்கள் கற்பிப்பதை விட வட்டித்தொழில்தான் செய்கிறார்கள், இனிமேல் வருடந்தோறும் ஒருஆய்வுகட்டுரையோ இல்லை மொழிமாற்று கட்டுரையோ செய்தால்தான் சம்பள உயர்வு என்று சொல்லவேண்டும். மாணக்கார்களுக்கு விடுமுறையின் போது மொழி மாற்று கட்டுரையை சமர்பிக்க சொல்லலாம். மெல்ல தமிழ் வளரும்.
இப்படியே நான் தமிழ் படிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே போனால், 'ஒருகாலத்தில் நாங்கள் தமிழில் பேசியதால் எங்களை தமிழர் எனக் கூறுவர்' என்பதில் போய் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக