தமிழர்கள் வாழ்நாள் முழுதும் நன்றி செலுத்த வேண்டிய மனிதர்களுள் ஒருவர் பென்னிகுக்...
முல்லைப்
பெரியாறு அணையினை படத்தோடு விளக்கும் ஒரு நிகழ்படம். ஏனென்று புரிகிறதா நண்பர்களே நமது பங்காளி மலையாளி இந்த அணையின்
மட்டத்தினை குறைக்கவும் அல்லது முழுவதுமாக மூடிவிட்டு புதிய அணை
கட்டத்துடிப்பதும், மின்சார உற்பத்திக்குகாகத்தான். ஆண்டுதோறும் தமிழகம் 176மெகாவாட் மின்சாரத்தினை
இந்த அணையின் நீர்மின் சக்தியால் உற்பத்திசெய்கிறது.
ஒரு வாதத்திற்கு
வைத்துக்கொண்டாலும் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி அணைக்குதான் நீர் செல்லுமே
ஒழிய இடுக்கி மாவட்டமே முழுகிவிடும் என்பது கற்பனை கலந்த திரிபு. இந்த அணை
இல்லாவிடில் தென் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்த நேரிடும்.
வைகை தந்த செழிப்பினை அந்த பிரதேசத்தில் பயணம் செய்து பாருங்கள்
உங்களுக்கு புரியும். எங்கும் பச்சை மயம். தமிழர்கள் வாழ்நாள் முழுதும் நன்றி
செலுத்த வேண்டிய மனிதர்களுள் ஒருவர் பென்னிகுக்...
கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பு அவர்களின் நல் ஒத்துழைப்போடு 152 அடிக்கு
எடுத்து செல்வது தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கவேண்டும்.
கூடங்குளம் முதல் அணு உலை அதன் முழு உற்பத்தி:
கூடங்குளம் முதல் அணு
உலை அதன் முழு உற்பத்திக்கும், அதாங்க 1000மெகாவாட்க்கும் அணு சக்தி கட்டுப்பாட்டு
அமைப்பிடம் அனுமதி வாங்கிவிட்டது. இது வரை 700மெகாவாட் உற்பத்தி செய்துகொண்டிருந்த
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்திற்கு 350மெகாவாட்டினை
அளித்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி முதல் அணு உலையானது
முழுமையான பயன்பாட்டிற்கு வந்தால் 460மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்கும், ஆனால் உள்ளூர் மக்களின் பலத்த போராட்டத்திற்கு பின்பும் தமிழக அரசு
தந்த ஒத்துழைப்பால் அகமகிழ்ந்த காங்கிரசு தலைமையிலான மத்திய அரசு கூடங்குளத்தின் முதல் அணு உலையின் முழுமையான உற்பத்தி அளவிலிருந்து 562மெகாவாட்டினை தமிழகத்திற்கு அளிக்கிறது. அதாவது 100மெகாவாட் அதன் மத்தியதொகுப்பின் பங்கிலிருந்து அளிக்கிறது.
இந்த அணுமின் நிலையமானது
கடந்த 2013 அக்டோபரில் தென்னிந்தியாவின் மின்சார கட்டமைப்போடு இணைக்கப்பட்டது. இப்பொழுது
கேரளா 133மெகாவாட், கர்நாடகா 221மெகாவாட், பாண்டிச்சேரி
33.5மெகாவாட்டும் மீதமுள்ள 50மெகாவாட் மத்திய தொகுப்புக்கும் செல்லுகின்றது. இங்கு
கேரளா 500மெகாவாட்டினை தன்பங்காக வேண்டுமேன்றது குறிப்பிடதக்கது, ஆயினும் மத்திய அரசு மறுத்துவிட்டது.
தற்போதைய கட்டணம் ஒரு
யுனிட்க்கு 1.22ரூ என்று அணுமின்சக்தி கழகம் நிர்ணயித்துள்ளது இருப்பினும்
பின்னர் இந்த விலை மறுபரிசிலனைக்கு உட்படும் என்றுள்ளனர், ஏனுங்க இது கட்டுமா,
ஏன்னா சுமார் 500 முதல் 800 கோடியில் டீசல் எஞ்சின் கொண்டு தனியாரால் நடத்தப்படும்
மின்நிலையங்களே ஒரு யுனிட்டுக்கு தமிழக அரசிடமிருந்து ரூ16 முதல் வாங்குவதாக தகவல். இதில் இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டுங்க...
இந்த பூதமானது அதாங்க
இந்த அணுமின்நிலையம் அதிகாரப்பூர்வமாக 13000கோடிக்கும் அதிகமாக விழுங்கி
நிற்கிறது. அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆயினும் நம்பதகுந்த வட்டாரம் சொல்லுவது நிர்ணயிக்கப்பட்ட
விலையிலிருந்து இருமடங்கு அதிக விலை இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதாகும்.
அதானல அணு மின்நிலைய அதிகாரிகளே நாம போட்ட முதலுக்கு பங்கம் வராம வசூல்
பண்ணுங்கப்பா, நமக்குத்தான் தணிக்கை கட்டுபாடு
என்பதெல்லாம் கிடையாது என்று ஆட்டம் போடாதீங்க. தரம் குறைந்த பொருள்கள் என
ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருந்தபொழுதும், எது எப்படியோ தாமதத்துக்கு காரணம்
உதயகுமார் என்று சொல்லியாச்சு; மக்களும் நம்பியாச்சு.
இரண்டாம் அணு உலை
பயன்பாட்டிற்கு வந்தால் இரண்டு உலையிலிருந்தும் தமிழகத்திற்கு வழங்கப்படும்
பங்கானது முந்தைய ஒப்பந்தப்படி 962மெகாவாட், ஆனால் இப்பொழுது புதிய ஒப்பந்தப்படி இரண்டாம் அணு உலையில் தோராயமாக
40மெகாவாட்டினை குறைக்கிறார்கள், ஆக தமிழகத்திற்கு கிடைக்கும் புதிய பகிர்மானம்
1025மெகாவாட் ஆகும்.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு:
பாஜக ஆட்சிக்கு வந்தால் சில்லரை வணிகத்தில் அந்நிய
முதலீடு தடுக்கப்படும் என்று கூறியிருந்தது. அதனால்தான் என்னவோ பிரெஞ்சு நிறுவனமான
கேரியர்போர் இந்தியாவிலிருந்து தனது முதலீட்டினை விலக்கி
கொள்வதாக அறிவித்துள்ளது. இருப்பினும் நமக்கு வந்த
தகவல்கள்படி அவர்கள் ஆசியாவின் பிற பகுதிகளிலும் இப்படி விலக்கிகொண்டதாக தெரிகிறது.
இந்தியாவின் ராணுவ பரிசோதனை வெற்றிகள்:
இந்தியாவின் தன்
முயற்சியில் ஆகாயத்திலிருந்து ஆகாய இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா
ஏவுகணையானது சுகோய் விமானத்திலிருந்து கடந்த மே 5 2014ல் வெற்றிகரமாக அதன் போலி
இலக்கினை நோக்கி ஏவப்பட்டது. இதன் முந்தைய பரிசோதனைகள் தோல்விய தழுவிய
நிலையில் இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. 2004 மார்ச்ல் இந்த ஏவுகணை திட்டம் சுமார் 955கோடி செலவில் ஆரம்பிக்கபட்டது.
கடந்த 2014 ஏப்ரல் கடைசி வாரத்தில் நடந்த மற்றொரு ராணுவ
சோதனையும் முக்கியத்துவம் வாய்ந்தது. தரையிலிருந்து ஆகாய இலக்கினை நோக்கி செல்லும் ஆகாஷ் ஏவுகணை தனது முதல் கட்ட பரிசோதனையில் வென்றுள்ளது, தற்போது இது தன்னை நோக்கி வரும் இலக்குகளை தடுத்து அழிக்கும், இரண்டாவது கட்டத்தில்
இது தன்னிடமிருந்து வெளியே செல்லும் இலக்குகளை அழிக்கும் வகையில் இருக்கும். இந்த வெற்றியானது ஏவுகணை தடுப்பு ஏவுகணை திட்டமாக பார்க்கப்படுகின்றது. இதன் வெற்றி வெகுவிரைவில்
இந்தியாவையும் அமெரிக்க, ரஷ்ய, இஸ்ரேல் மட்டுமே கொண்டுள்ள ஏவுகணை முறிப்பு வட்டத்தில் சேர்க்கும்.
பச்சபுள்ள மன்னாரு# அப்ப
இனிமேல் நம்ம பதினைந்து நாள் ராமசாமி இல்ல இல்ல நாராயணசாமிய பார்க்கமுடியாதா...




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக