புதன், 7 ஆகஸ்ட், 2013

என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில் - ஒர் பார்வை பகுதி 1



பாகிஸ்தானின் சமீபத்திய தாக்குதல்கள்: 
  • ஜனவரி 8ல் பாகிஸ்தான் துருப்புக்கள் 2 இந்திய ஜவான்களை கொல்ல,  அதில் ஒருவரின் தலையை வெட்டினர்.  
  • ஜூலை 3ல் பாகிஸ்தான் இராணுவம், ஜூலை 1 ம் தேதி ஊடுருவிய தீவிரவாதியின் உடலை  சேகரிக்க இந்திய வீரர்கள் எல்லைக்கு அருகில் போன பொழுது ஜவான்களின் மீது துப்பாக்கி சூடு.
  • ஜூலை 8ல்  பூஞ்ச் ​​பகுதியில்  IED தாக்குதலில் காயமடைந்தவரை சுமை தூக்க முயன்ற படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.
  • ஜூலை 12 ஜம்மு Pindi பெல்ட் பகுதியில்,  இந்திய படை மீது துப்பாக்கி சூடு.
  • ஜூலை 22l பூஞ்ச் ​​உள்ள கோடு நெடுகிலும் இந்திய படை மீது தாக்குதல்.
  • ஜூலை 27-28 கதுவா மற்றும் பூஞ்ச்ல்ல் ​​துப்பாக்கி சண்டையில், முகாமில் ட்ரூப்பர் காயம்.
  • ஆகஸ்ட் 6 ல் தீவிரவாதிகள், பாகிஸ்தான் இராணுவம் இனைந்து பூஞ்ச் ​​பகுதியில் ஐந்து ஜவான்களை கொன்றனர்.





11​மாநிலங்களில் 17 புதிய விமான நிலையங்கள் - இந்திய அரசு அறிவிப்பு.

இந்திய விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சி திறன் மற்றும் சவால்களை
 ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும்  வகையில் இந்திய அரசாங்கம் 11 மாநிலங்களில் 17 புதிய விமான நிலையங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அது அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் போன்ற குறைவான விமான நிலைய வசதி கொண்ட மாநிலங்களில் விமான இணைப்பை மேம்படுத்த ஒரு விரிவாக்க திட்டத்தை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்களானது 12வது ஐந்து ஆண்டு திட்டத்தின் போது கட்ட முன்மொழியப்பட்டுள்ளன என்று சிவில் விமான போக்குவரத்து மாநில அமைச்சர்  கே.சி. வேணுகோபால் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்தார். 

கர்நாடகா இ​ந்த அறிவிப்பில் மிகப்பெரிய பயனாளியாக போகிறது, ஆம் குல்பர்கா, பிஜப்பூர், ஹாசன், ஷிமோகா என நான்கு விமான நிலையம் அந்த மாநிலத்திற்கு மட்டும். கோவாவிற்கு இரண்டாவது விமான நிலையம் மோபாவிலும், கேரளாவில் நான்காவது விமான நிலைய திட்டம் ஆரன்முலாவில் அமையுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் முறையே இட்டாநகர், கிசான்கர்க் மற்றும் தியோகரில் விமானநிலையம் கட்டப்பட உள்ளது.

இ​வ்வளவு அறிவிப்பு இருப்பினும் இந்திய விரிவாக்கமானது, சீனாவை ஒப்பிடுகையில் மங்கலாகிறது. அந்த நாட்டின் விமான போக்குவரத்து கண்காணிப்பு தலைவர் 70 புதிய விமான நிலையங்கள் 2015ற்குள் சீனாவில் கட்டப்பட உள்ளது என்று கடந்த ஆண்டு கூறினார். மேலும் இந்திய விமான போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான CAPA இந்தியா 2025 ஆம் ஆண்டில் 50 கீரின்பீல்ட் விமான நிலையங்கள் இந்தியாவில் அமையவேண்டுமானால் சுமார் $ 40 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகள் தேவை என்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக