சமீபத்தில் கடந்த வாரம் நமது அரசாங்கத்தின்
வலைதளத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது ஆங்கிலத்திலிருந்து
தமிழிலும் அந்த வலைதளமானது பார்ப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்ததை அறிந்து
பெரு உவகை கொண்டேன், ஆனால் அங்கு சென்ற பிறகு வருத்தமடைந்தேன், ஆம் தமிழ்நாட்டின்
மாவட்ட வரைபடமானது ஆங்கிலத்தில் இருப்பதை கண்டு, பின்பு அதனை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் தொடர்பு
கொள்ள முயன்றேன் அந்த பக்கமானது தொடர்பு அறுந்து போயிருந்தது.
பின்பு வேறு வழியின்றி குறிஞ்சிக்கு கடிதம் அனுப்பினேன்.
6ம் வகுப்பு மாணவர்களுக்கு வாங்கி கொடுக்கும் அட்லஸ்(ATLAS) மேப் என்பதிலேயே தமிழ் பதிப்பு உள்ளது அங்கு இருந்தாவது வரைபடத்தினை நிழல்படமாக்கி வலைதளத்தில் ஏற்றாலாமே.
இது சிறிய பிழைதான் ஆயினும் தமிழக அரசாங்க வலைதளத்தில் தமிழ் பக்கத்தில் ஆங்கிலம் இருந்தால் வேறு யார்தான் பின்பற்றுவார்கள் தமிழை ஆங்கில கலப்பின்றி. இது கவன குறைவாக கூட இருக்கலாம், ஆயினும் தமிழை பயன்படுத்த முயன்றால் முழுதாக முயலுவோமே. சம்பந்தபட்டவர்கள் ஆவண செய்வார்களா...
குறிஞ்சி: சகோதரரே தற்போது அந்த வளைதளம் நன்கு செயற்படுகின்றது, உங்கள் சார்பாக நாங்கள் எங்களது கருத்தினை பதிவு செய்துவிட்டோம். அது மட்டுமின்றி அந்த வளைதளமானது ஆகத்து 2ல் சரி செய்யப்பட்டுள்ளது, எனவே நீங்கள் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக