ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நண்பேன்டா...


நண்பர்கள் தினம் சிறப்பு பதிவு!
தனித்தனியாய் பிறந்தோம்....
தனித்தனியாய் வளர்ந்தோம் ....
குறிஞ்சி மூலமாய் நண்பர்களாய் இணைந்தோம்....
இன்று நண்பர்கள் தினம் மூலம் நம் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வோம்.
நண்பர்களுக்குள் கோபம் உண்டு, ரோசம் உண்டு, மானம் உண்டு .....ஆனால் அதை எல்லாம் விட பாசம் உண்டு

"பனைமரம்: தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.
தென்னைமரம்: தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம்: தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன் தரும். அதுபோல நம்மிடம்அனுதினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழை மரம் போன்றவன்.
இந்த மூவரில் பனை மரம் போன்றவனை நண்பனாக தேர்ந்தெடுக்க வேண்டும். - கண்ணதாசன்"
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிருப்பவர்கள் எண்ணும் முன்னே
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் நண்பன் தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும் தான் கொடுப்பான்.... 
எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் உறவு தான் நட்பு....


அதைதான் இந்த குறிஞ்சி செய்ய ஆசைபடுகிறது ... 

நண்பர்கள் தினம் எப்போ பிறந்தது யாரால் தொடங்கப்பட்டது என்பதை விட நாம் எப்படி அதை கொண்டாடுகிறோம் என்று பார்போம்... 
நண்பர்களாய் இணைவோம் நல்லதை இங்கு பகிர்வோம்  

குறிப்பு:-  ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அதை ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்

நட்பு வேறு காதல் வேறு இதை புரிந்து நடந்தால் நட்பு கூட ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக