தெலுங்கானா
தக்காணபீட பூமி பகுதியில் வருகின்றது. கோதாவரி, கிருஷ்ணா என இரண்டு நதிகள்
உற்பத்தி ஆனாலும் கடலோர ஆந்திராவே அதன் செழிப்பை அனுபவிக்கின்றது.
ஆந்திராவின் மிகவும்
பின்தங்கிய 13 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் தெலுங்கானா பகுதியில் உள்ளது.
இந்தியாவின் நக்சலைட்களின் தலைவர்கள் பெரும்பாலும் இந்த பகுதியைச் சார்ந்தவர்கள்.
தெலுங்கானாவில்தான்
ஹைதராபாத்தும் உள்ளது. ஆனால் பொருளாதாரத்திலும் அரசியல் செல்வாக்கிலும் கடலோர
ஆந்திர மக்களின் பங்கு பெரிது. ராயலசீமாவிலிருந்து வந்தவரே ராஜசேகரரெட்டி எனவே
ஜெகன்மோகன்ரெட்டியின் பிடி அங்கு அதிகம்.
தெலுங்கானாவின் பரப்பளவு
41.5%, கடலோரஆந்திராவின் பரப்பளவு 33.8%, ராயலசீமாவின் பரப்பளவு 24.5%ஆகும். மக்கள்தொகையில் 3.5 கோடி
தெலுங்கானாவிலிருந்தும் 4.8 கோடி மீதமுள்ள பகுதியிலிருந்தும் வருகின்றது.
சட்டமன்ற தொகுதிகள் 119 தெலுங்கானாவிலிருந்தும் 175
மீதி ஆந்திராவிலிருந்தும் வருகின்றது. லோக்சபாவை பொறுத்தவரையில் 17
தெலுங்கானாவிலிருந்தும் 25 மீதி ஆந்திராவிலிருந்தும் வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக