THREADED - ஓரு பொருளை நிலை நிறுத்தவதற்காக
ஓன்றின் வழியே செலுத்த உதவுவது; திரட்டி
TABE - நாடா
FITTING - பொருத்துதல்; பொருத்தி
MALE FITTING - ஆண் பொருத்து கருவி; ஆண் பொருத்தி
FEMALE FITTING - பெண் பொருத்து கருவி; பெண் பொருத்தி
LEAKAGE - ஓழுகல்
எங்களுக்கு தெரிந்த
மொழியில் மாற்றம் செய்துள்ளோம், யாராவது சரியான தமிழ் பெயர்களை வழங்கினால்
மேலுள்ள மொழி மாற்றம் சரி செய்யப்படும்.
டெப்லான் டேப் பிளம்பர்கள் (குழாய்
வேலை செய்பவர்கள்) அதிகம் உபயோகப்படுத்தும் பொருள். எங்கெல்லாம் நீர் அல்லது வாயுவானது
குழாயின் வழியே எடுத்த செல்லப்படுகின்றதோ அங்கேல்லாம் அதிகம் டெப்லான் டேப் ஆனது குழாயின்
பொருத்து கருவிகளில்(ஆண்) மேலே சுற்ற பயன்படுத்தபடுகின்றது.
பெயரே தவறு:
டெப்லான் டேப் என்பதே தவறு. அதனுடைய
சரியான பெயர் த்ரெட்டட் சீல்(THREADED
SEAL) ஆகும். டெப்லான் என்பது டுபான்ட்
நிறுவனத்தாரால் இந்த நாடாவுக்கு வழங்கப்பட்ட வியாபார பெயர், இந்த நாடாவானது அதிகம்
சந்தையில் ஊடுருவிய காரணத்தால் இந்த பெயரே நிலைத்துவிட்டது.
இது "பாலிடெட்ராபுளோரோஎத்திலின்"
(PTFE - Polytetraflouraethylene) எனும் வேதியியல் பொருளால் செய்யபடுகின்றது. இது அதிகம்
வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டது. இதன் உருகு வெப்பநிலையானது 620.6 டிகிரி பாரன்கீட்
ஆகும்.
குழாய் ஓழுகலை(LEAKAGE) அடைப்பதற்காகத்தான் இந்த நாடாவானது பயன்படுத்தபடுகின்றது என்றுதானே நாமெல்லாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம், அது தவறு பின்வரும் காரணங்களுக்காகவே இது பயன்படுத்தபடுகின்றது:
இதனை "ஆண் பொருத்து கருவிகளின்"(MALE
FITTING) மேலே சுற்றுவதனால் அதன் தடமானது(THREAD)
உராய்வின் காரணமாக பாதிக்கப்படாது. மேலும்
பாலிடெட்ராபுளோரோஎத்திலினின் சிறப்பம்சமானது மசகுப் பொருளாகவும்(lubricating) செயல்படுவதால்
இது எளிதில் ஆண் பொருத்து கருவிகளை பெண் பொருத்து கருவிகளில்(FEMALE FITTING) நிறுத்துகின்றது.
மூன்று சுற்றுக்கள்:
சுற்றுக்களின்
எண்ணிக்கையை பொருத்தவரையில் முழுதாக மூன்று சுற்றுக்கள் போதுமானது, அதிக
சுற்றுக்களின் எண்ணிக்கையானது நாளடைவில் பெண் பொருத்து கருவிகளில்
வெடிப்பு ஏற்பட செய்யலாம்.
கடிகார வரிசை:
சுற்றும் திசையை
பொருத்தவரையில் கடிகார வரிசையில் சுற்றவேண்டும், ஏனெனில் நாம் ஆண் பொருத்துக் கருவியை பெண் பொருத்து கருவியில் பொருத்தும் பொழுது
கடிகார திசையிலே சுற்றுவோம் அதனால் இந்த நாடாவும் இருக பற்றிக் கொள்ளும் அதைவிட்டுவிட்டு எதிர்கடிகார வரிசையில் சுற்றகூடாது, அப்படி செய்தால் ஆண் பொருத்து
கருவியை இணைக்கும் பொழுது நாடாவானது ஒன்றாக திரண்டு ஓருபுறம் ஓதுங்கிவிடும் ஆகவே அதன்
முழுப் பலனும் அடையமுடியாது போய்விடும்.
இது வெள்ளை,
பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. பச்சை மற்றும் மஞ்சள் வாயு குழாய்களில்
பயன்படுத்தபடுகின்றது.
குழாய்
வேலைகளின் பொழுது இந்த நாடாவை நீங்கள் எப்படி சுத்துகிறீர்கள், எவ்வளவு வேகத்தில் என்பதை
வைத்தே உங்களின் தொழில்திறமையை அனுபவசாலிகளினால் எடை போட முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக