டேடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல வில்லாளா என்ன பாட்டு பாடுறேனு பார்க்கிறீங்களா, அப்படியே இந்த காணொளியையும் காணுங்கள் பின்பு நாம் அளவலாவோம்.
இங்க நம்ம கூடயும் நிறைய நொல்லைகள் இருக்குது ஆங்கிலம்தான் பேசுவார்கள் அவங்களுக்கு இது தவறு என என்று புரியும் எனத் தெரியவில்லை அந்த மார்வாடி அம்மா சொன்ன மாதிரி நீங்கள் ஆயிரம்தான் ஆங்கிலம் பேசினாலும் நாம் வெள்ளைக்காரர்கள் ஆக முடியாது நண்பர்களே, இனிமேலாவாது ஆங்கிலம் தவிர்ப்போம் வீட்டில்.
எனக்குத் தெரிந்த நிறைய மலையாளிகள் இடப்பெயர்ச்சியோ அல்லது வேலையின் காரணமாகவோ கேரளாவை விட்டுஆயிரமாயிரம் மைல்கள் கடந்து வசித்தாலும் அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் அப்பா, அம்மாவை "அச்சா, அம்மே" என்றே விழிப்பர் ஆனால் தமிழகத்தில் டேடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை... அதைவேறு பெருமையாக ஊக்குவிக்குறார்கள். தலையில் அடிக்கவேண்டும் எனத் தோன்றும் அட என் தலையில்தாங்க...
அறிவியல் தமிழ்தான் நீங்கள் கூறும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை, ஆனால் பேச்சு தமிழ் இங்கோ ஆங்கிலத்துக்கு முன்பே வழக்கில் இருக்கிறது. வேலை அல்லது படிப்பு போன்ற காரணங்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலமோ அல்லது வேறு மொழியையோ கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் நாம் இரஞ்சுவதெல்லாம் வீட்டில் பேச்சு தமிழில் பேசுங்கள் என்றே.
அடையாளத்தை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் கேளுங்கள் அதன் வலியை உணர்ந்தவர்கள் அவர்கள். அடையாளத்தின் அவசியம் உணர்ந்தவர்கள் அவர்கள், பாரதியின் கூற்றுக்கிணங்க பிறமொழி சாத்திரங்களை மொழி பெயர்ப்போம் தமிழையும் வளர்ப்போம். ஆக நாம்தான் வளர்க்க வேண்டும் நம் தமிழை.
.
பேச்சோடு நின்றுவிடக்கூடாது மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் குறிஞ்சியில் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அதிகம் தமிழில் வெளியிடுகின்றோம், எங்களோடு இணைய விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கட்டுரைகளையும் எழுதி அனுப்புங்கள் பிரசுரிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ் போனெடிக் தட்டச்சு நிழற்படம்.
எங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய ஆசை உள்ளது ஆனால் அதற்கான வழி தெரியவில்லை எனக் கூறும் நண்பர்களே,
அதிகமான தமிழ் தட்டச்சு மென்பொறியானது இன்று வழக்கத்திற்கு வந்துவிட்டது, அவற்றில் UNICODE, INSCRIPT, PHONETIC குறிப்பிடத்தகுந்தவை ஆகும், ஆயினும் நான் விரும்புவது போனெடிக் தட்டச்சு வடிவம் ஆகும் ஏனெனில் இது உச்சரிப்பு சார்ந்து உள்ளது. எனவே எளிதில் கற்றுக் கொள்ளலாம், நினைவில் வைக்கவும் எளிது. நான் உபயோகப்படுத்துவது குறல்சாப்டு எனப்படும் இலவச பிரவசர் சார்ந்த மென்பொறி எனவே தரவிறக்கம் செய்யவும் அவசியம் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக