SPANNERS - திருகி முடுக்கும் கருவி, புரியாணிச்சாவி, திருகு
முடுக்கி,
WRENCH - குறடு
BOLT - திருகு
FASTENING - இறுக்க
CROW FOOT SPANNER - காகம் பாதம் திருகு முடுக்கி
PIN SPANNER - முள் திருகு முடுக்கி
CONE SPANNER - கூம்பு திருகு முடுக்கி
RATCHET - சக்கரம் பின்புறம் சுழலாமல் தடுக்கும்
பற்சக்கரத் தடை, ஒருபுறம் நுழைவை அனுமதித்து மறுபுறம் நுழைவை தடுக்கும் பற்சக்கர
அமைப்பு
SPANNER (திருகுமுடுக்கி) என்பது பிரிட்டிசாரின்
சொல்லாடல், WRENCH(குறடு) என்பது அமெரிக்கர்களின் சொல்லாடால்
ஆக இரண்டுமே ஒன்றுதான் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
ஒரு திருகு முடுக்கி அல்லது குறடு
பல பயன்பாடுகள் கொண்ட ஒரு பல்துறை கருவியாகும். முக்கியமாக, ஒரு திருகு முடுக்கி அதனை ஒரு திருகின் மேலோ அல்லது
NUTன் மேலோ வைத்து ஒரு இறுக்கமான பிடியினை வழங்குவதன் மூலம் இத்தகைய திருகு அல்லது
NUT போன்ற பல்வேறு பொருட்களை இறுக்கவோ அல்லது தளர்த்தவோ பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் திருகு முடுக்கி அளவானது திருகு அல்லது NUTன் அள்வை
பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.
FORGING என்றால் என்ன?
திருகு முடுக்கியானது உயர் தரமான இரும்பு அல்லது உலோகங்கள்
மூலம் செய்யப்படுகின்றது. முதலில் இது வெப்ப உலையின் மூலம் உயர் வெப்பநிலைக்கு கொண்டு
செல்லப்பட்டு தேவையான வடிவத்துக்கு இதனை கொண்டு வர சுத்தியலால் அடித்தோ, அழுத்தத்தின்
மூலமாகவோ, உருளைகள் கொண்டு உருளச்செய்தோ அல்லது பிழியப்பட்டோ வார்க்கப்ப்டுகின்றன.
ஒவ்வொரு திருகு முடுக்கிக்கும் ஒரு தனிப்பட்ட பயன்பாடு உள்ளது.
பயன்பாட்டில் காகம்
பாதம் திருகு முடுக்கி, முள் திருகு முடுக்கி, கூம்பு திருகு முடுக்கி போன்ற பல திருகு முடுக்கிகள் இருந்தாலும்
நாம் இந்த பதிவில் மிகவும்
பொதுவான திருகு முடுக்கிகள் பற்றி பார்ப்போம்.
இருபுறமும் திறந்த திருகு முடுக்கி (OPEN
END SPANNER):
இருபுறமும் திறந்த திருகு முடுக்கியானது "U" வடிவத்தில் இரு
புறமும் வெவ்வேறு அளவில் இருக்கும். இந்த திருகு முடுக்கியை பொதுவாக எந்த பொருளினை
இறுக்க வேண்டுமோ அந்த பொருளின் மேலே பொருத்தி கடிகார
சுற்றில்(CLOCKWISE) சுற்ற வேண்டும் அது போல்
தளர்த்த வேண்டுமெனில் எதிர் கடிகாரச் சுற்றில்(ANTI-CLOCKWISE) சுற்ற வேண்டும்.
![]() |
| இருபுறமும் திறந்த திருகு முடுக்கி |
வளைய திருகு முடுக்கி (RING
SPANNER):
வளைய திருகு முடுக்கியானது இறுதியில்
மூடப்பட்ட துளைகள் கொண்டு வெவ்வேறு அளவில் அமைந்திருக்கும். இது இருபுறமும் திறந்த திருகு
முடுக்கியினை விட வலுவான பிடியினை வழங்கும். இந்த வளையங்கள் ஒரு அறுங்கோண
அல்லது சதுர வடிவில் இறுக்கமாக பொருந்தும் வகையில் உள்ளது.
![]() |
| வளைய திருகு முடுக்கி |
கூட்டு திருகு முடுக்கி (COMBINATION
SPANNER):
ஒரு கூட்டு திருகு முடுக்கியானது ஒரு முனையில்
இருபுறமும் திறந்த திருகு முடுக்கியையும் மறுபுறம் வளைய திருகு
முடுக்கியையும் கொண்டு அமைந்திருக்கும். இது இரு புறமும் ஒரே அளவில் இருக்குமாறு வடிவமைக்கபட்டிருக்கும்.
![]() |
| கூட்டு திருகு முடுக்கி |
அனுசரிப்பு திருகு
முடுக்கி (ADJUSTABLE SPANNER):
ஒரு அனுசரிப்பு திருகுமுடுக்கி அல்லது
ஒரு மாற்றக்கூடிய திருகு முடுக்கியானது ஒரு அத்தியாவசிய
மற்றும் பல்துறை கருவி ஆகும், அதன் இறுதியில் தாடையை மாற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே எளிதில் வெவ்வேறு அளவிலான திருகுகள் மற்றும் NUTக்களை ஓரே
கருவியை கொண்டு எளிதில் இறுக்கவோ, தளர்த்தவோ முடியும் எனவே வெவ்வேறு அளவிலான திருகுமுடுக்கிகளை
நாம் சுமந்து கொண்டு திரியவேண்டியிராது. ஆயினும் பொறியியல் துறையில் இந்த மாதிரியான திருகுமுடுக்கிகளை
பரிந்துரை செய்வதில்லை, ஏனெனில் இந்த திருகுமுடுக்கியானது
திருகுகளின் மேலே இறுக்கமாக பொருந்துவதில்லை. அதனால் நாம் எப்பொழுது அழுத்தம் கொண்டு
திருகுகளை இறுக்கவோ, தளர்த்தவோ முயன்றால் திருகு
முடுக்கி வழுக்கி கொண்டு செல்லும் எனவே இந்த திருகு
முடுக்கிகளினால் எளிதில் திருகுகளோ அல்லது NUTக்களோ
சேதமடைய வாய்ப்பு அதிகம்.
![]() |
| அனுசரிப்பு திருகு முடுக்கி |
ஒரு வழி பற்சக்கர திருகு முடுக்கி (RATCHET SPANNER):
ஒரு வழி பற்சக்கர திருகு முடுக்கியானது
மற்ற திருகு முடுக்கிகள் போன்று ஒவ்வொரு திருகுக்கும் ஆரம்ப நிலைக்கு கையினை கொண்டு
வர தேவையின்று அதனுள்ளே உள்ள பற்சக்கர அமைப்பின் உதவியின் காரணமாக எளிதில்ஆரம்ப நிலைக்கு
கொண்டு வந்து மீண்டும் திருகினை இறுக்குவதற்கு உதவும். அதே போன்று தளர்த்துவதற்கு மாற்று
திசையில் பிடிக்க வேண்டும். இந்த மாதிரியான திருகு முடுக்கியானது எளிதில் அணுக முடியாத
இடங்களில் உள்ள திருகினை கழட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
![]() |
| ஒரு வழி பற்சக்கர திருகு முடுக்கி |
சரியான வழிமுறைகள்:
1. மிகச் சரியான அளவு கொண்ட திருகு
முடுக்கியை பயன்படுத்த வேண்டும். (USE CORRECT SIZE)
2. சேதமடைந்த திருகு முடுக்கியை பயன்படுத்த கூடாது. (DONT USE DAMAGED
TOOL)
3. குழாய் கொண்டு நெம்பகூடாது. அப்படி வேண்டுமெனில்
நீண்ட திருகு முடுக்கியை பயன்படுத்துங்கள். கீழேயுள்ள படம் தவறான முன்னுதாரணம்.
(DONT USE LEVERAGE PUMP)
4. PULL ALWAYS DONT PUSH எப்பொழுது திருகு முடுக்கியை இழுக்கவே வேண்டும் கீழேயுள்ள படத்தினை
இடது புறம் பாருங்கள், அப்படியும் நீங்கள் தள்ள வேண்டிய(கீழேயுள்ள படத்தின் வலது புறம்)
சூழ்நிலை வந்தால் கையின் பாதம் கொண்டு தள்ள வேண்டும் அப்படியெனில் திருகு முடுக்கி வழுக்கினாலும்
அடிபடாது.
மேலுள்ள படத்தில்
இன்னுமொன்றையும் நீங்கள் கவனிக்கலாம், திருகு முடுக்கியின் முனையில் ஒரு புறம் புடைத்தும் மறுபுறம் சிறிய வளைவும்
உள்ளது, அந்த வளைவானது நாம் திருப்ப வேண்டிய திசையிலே இருக்கவேண்டும்.
5. திருகு முடுக்கியை சுத்தியல் கொண்டு அடிக்க கூடாது. (DONT USE HAMMER)
6. தரமான திருகு முடுக்கி வாங்கி
பயன்படுத்துங்கள். (BUY QUALITY)








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக