உங்கள் கணினியில்
ஏதாவது பிழையான தகவல்களை உள்ளீடு செய்கிறீர்கள் என்போம். என்ன ஆகும்? கணினி உடனே
பிழைச் செய்தியைக் காட்டும். இது ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது உங்களுக்குத்
தெரிந்த ஒன்றுதான். இதைத் தமிழில் கொண்டு வர முடியுமா?
முடியும். இதற்கு
உங்களிடம் இருக்க வேண்டிய வசதிகள் என்னென்ன? கணினி. அதில் எக்செல் 2007 தொகுப்பு.
அப்புறம் பாமினி எழுத்துருவைப் பயன்படுத்துவதற்கான வசதி. இதற்கு நீங்கள் என்எச்எம்
ரைட்டர் என்ற பயன்பாட்டைக் கையாளலாம். அதாவது உங்களுக்குத் தமிழ் எழுத்துக்களை ஒருங்குறியில்
தட்டச்சிடத் தெரிந்தால் போதும். எக்செல் சிற்றறை
ஒன்று. அதில் நீங்கள் ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை மட்டுமே அடிக்கலாம் என்று
அனுமதி கொடுக்கிறீர்கள். இதற்கு வேலிடேஷன் (Validation )என்று பெயர். இதை எப்படிச் செய்வீர்கள்?
Data
Data Tools
Data Validation
என்ற வரிசையில் செல்ல
வேண்டும். இது போன்ற திரை
வரும்.
இதில் Settings
, Whole Number என்று அமைத்துக்
கொள்ளுங்கள். முழு எண்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று குறிப்புக்
கொடுக்கிறீர்கள். அடுத்து வரும் திரை
பின்கண்டவாறு தோன்றும்.
குறைந்தபட்சம் 1 அதிகபட்சம்
10 என்று எல்லை வகுப்பதற்காக Minimum 1, Maximum 10 என்று கொடுத்துக் கொள்ளவும்.ஓகே கொடுத்துவிடுங்கள்.
அடுத்து Error Alert என்பதில் கிளிக் செய்து இந்தத் திரையைப் பெறவும்.
இப்போது என்ற
இடத்தில் உங்கள் பிழைச் செய்திக்கான தலைப்பைத் தமிழில் அடிக்கவும். கீழே என்று
உள்ள இடத்தில் என்ன பிழை என்பதற்கான விளக்கத்தை அடிக்கவும். ஓகே
கொடுத்துவிடுங்கள். இனி நீங்கள் Validation செய்த கட்டத்தில் போய் 1 முதல் 10 வரையிலான எந்த
முழு எண்ணை அடித்தாலும் பிழைச் செய்தி வராது. ஏனெனில் நீங்கள் அடிப்பது சரியான
உள்ளீடுதான். மாறாக 52 என்று
அடித்தீர்கள் என்று வையுங்கள்.பிழைச் செய்தி தோன்றும். மாதிரிக்காக
உருவாக்கிய பிழைச் செய்தியைப் பாருங்கள்.
தவறு செய்தாலும்
மகிழ்ச்சியான தவறு இல்லையா?
தவறாக உள்ளீடு செய்தபின்
இப்படி எச்சரிக்கை செய்து என்ன பலன் என்பீர்கள். குறிப்பிட்ட கட்டத்தில் எதை
உள்ளீடு செய்யலாம் என்பதை அறிந்து கொள்வதற்கு அந்தக் கட்டத்தின் மேல் சுட்டியை
நிறுத்தினாலே விளக்கங்களை அளிக்க வைக்கலாம். அவற்றையும் தமிழிலேயே காட்ட
வைக்கலாம். இதற்கு நீங்கள் Input Message என்பதில்
ஒரு தலைப்பையும் அதற்குரிய விளக்கத்தையும் தமிழில் அடித்து ஓகே கொடுத்துக் கொள்ள
வேண்டும்.
செய்து பார்த்தால்
பிழைகளே பிடித்தமானவை ஆகிவிடும். பாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக