![]() |
| எம்மதமும் சம்மதமே |
நீ தேர்ந்தெடுத்ததில்லை இந்த மார்க்கத்தை
நான் பின்பற்றுவேன் என்று - அது
உனக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது
அவ்வளவே ஆக
பிற மார்க்கத்தை குறை கூறாதே.
விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு
மற்றவர்களிடத்தில்
உள்ள நல்லதை நாம் பின்பற்றுவோம்
அதை விட்டுவிட்டு எது பெரிது
என்று தனிமனித ஆராய்ச்சியெல்லாம்
வேண்டாம்.
எம்மார்க்கமும் வன்முறையை சொல்லித் தருவதில்லை
மார்க்கெங்கலெல்லாம் அன்பையும்
ஆறுதலையுமே தருகின்றது
எங்கோ யாரோ செய்யும் தனிமனித
தவறுகளுக்கு மொத்த மார்க்கத்தையும் பழிக்கழாகாது.
இங்கு ஆக்கபூர்வமாக செயல்பட ஆயிரம்
விசயங்கள் உண்டு என் சகோதரா
அழிவு வேண்டாம், ஆக்கங்கள் உருவாக்கிட
கை கோர்த்திடுவோம் வா சகோதரா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக