செவ்வாய், 2 ஜூலை, 2013

சினிமா.. சினிமா...

 தனுஷ்


   'துள்ளுவதோ இளமை' பாத்துட்டு தனுஷை திட்டாத ஆளுங்க உண்டா...? சொல்லுங்க... அப்படி திட்டு வாங்கி, திட்டு வாங்கி தேசிய விருது வரைக்கும் போனவரு இப்போ 'ராஞ்சனா' மூலமா பாலிவுட்டையே கலக்கிகிட்டு இருக்காரு... செவத்த தோலும், சிக்ஸ் பேக்குமா கதாநாயகர்களைப் பாத்த பாலிவுட் ரசிகர்களால தனுஷோட இயல்பான உடல்மொழியுடன் கூடிய நடிப்பைப் பாராட்டாம இருக்கமுடியல... படமும் நல்ல வசூல். சும்மாவே 'பணிவு' காட்டி பம்முவாரு தனுஷ், இப்போ இன்னும் பம்முவாரே... அதைத்தான் சகிக்கமுடியாது.  எனிவே, வாழ்த்துக்கள் தனுஷ்.

 சென்னை எக்ஸ்பிரஸ்



     சும்மாவே தமிழனை நக்கல் பண்ற ஆசாமியான ஷாருக் தமிழ்நாட்டை மையமா வச்சு ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கும்? படம் வந்தவுடனே ரகளை பண்றதுக்காகவே ஒரு க்ரூப்பு காத்துகிட்டு இருக்கும். ஆனா, படத்தோட ட்ரெயிலர் பாத்தா முதல்ல நாம நம்ம தமிழ் சினிமா இயக்குனர்களைத்தான் திருத்தணும்னு தோணும். ஹரி, சுராஜ், பேரரசு மாதிரி மசாலா பார்ட்டிங்க பண்ற அட்ராசிட்டியைத்தான் எடுத்திருக்காங்க. இதுக்காக எல்லாம் நாம கோபப்படமுடியாது. கொஞ்சம் அசடு வழிய தயாரா இருக்கணும்னு தோணுது. இதுவரைக்கும் ஷாருக்கை பிடிக்காதங்களுக்குக் கூட இங்கே கொடுத்திருக்கிற பாடல் லிங்கைப் பாத்தா பிடிச்சுடும்னு தோணுது. செம குத்து. 



 சரி... அடுத்த சினிமா பகுதியில பாப்போம். பை...!

- சினிமாக்காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக