நீங்கள் விரும்பும் பிரஷ்ஷை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்..வெகு எளிதான
வேலை..வேறு யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள்
உங்களுக்கு ஓவியம் வரைவதில் பெரிதும் நாட்டம் இருக்கலாம். ஆரம்ப நிலையில்
கணினி கற்றுக் கொள்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபிசில் உள்ள பெயின்ட் என்ற பயன்பாடு
பெரிதும் உதவும் என்று சொல்வார்கள். பலரும் இதே காரணத்திற்காகவே பெயின்டை
அலட்சியப்படுத்துவதும் உண்டு. ”பெயின்ட் என்பது கற்றுக் குட்டிகளுக்கான
பயன்பாடு.. அதைப் போய் நாங்கள் பயன்படுத்துவதாவது..போட்டோஷாப் மாதிரி அசத்தலான
வசதிகளைக் கொண்ட பயன்பாடுகளில்தான் வேலை செய்வோம்” என்று
சொல்கிறவர்களும் இருப்பார்கள். அவர்களை விடுங்கள்.
அவர்களுக்கு ஒரு விவரம் உண்மையாகவே தெரியாது. வரையும் வேலைகளுக்கும்
வரைந்தவற்றைத் திருத்தி அமைப்பதற்கும் பெயின்ட் பெரிய, பெரிய வல்லுநர்களால்
பயன்படுத்தப்படுவது. நீங்கள் இப்போதுதான் கணினியையே பயன்படுத்த
ஆரம்பித்திருந்தாலும் வல்லுநர்களுக்கே பிடிபடாத பல உண்மைகளை நீங்களே
கண்டுபிடித்துப் பயன்படுத்திப் பார்க்கலாம். பெருமகிழ்ச்சி கொள்ளலாம். அத்தகைய நடவடிக்கைகளுள் ஒன்றுதான்
உங்களுக்குத் தேவையான, உங்களுக்குவிருப்பமான பிரஷ் வகைகளை நீங்களே உருவாக்கிக்
கொள்வது.
வழக்கமாக எல்லாரும் கணினியில் என்னென்ன பிரஷ்கள் கிடைக்கின்றனவோ
அவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். அதைத் தாண்டி அவர்களது கற்பனையைச் சிறகடிக்க
வைக்க நினைக்க மாட்டார்கள். நீங்கள் அப்படியல்ல. வாருங்கள் உங்களை வல்லுநர்
ஆக்குகிறோம்.
இந்த வழிமுறைகளைப் பாருங்கள்
Select
Pencil tool
Draw a
little scribe as you like in your favorite color
Select
your drawing
Turn
Transparency on
Hold
Shift.
Move your
drawing. See and Enjoy.
ஆங்கில வழி விளக்கங்கள் புரிகின்றனவா? இவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டிய
வேலைகள். இது எங்களால் முடியும் என்கிறவர்கள் நேரடியாகச் செயலில் இறங்கலாம்.
விதவிதமான பிரஷ்களை உருவாக்கிப் பயன்படுத்தி மகிழலாம். அது புரியவில்லை என்பவர்கள்
தமிழ் விளக்கங்களைப் படியுங்கள்:
பெயின்ட் பயன்பாட்டைத் திறந்து பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள்.
விரும்பிய நிறத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
திரையில் சின்னதாய் ஏதோ ஒரு கிறுக்கலை
ஏற்படுத்துங்கள்.
அதைத் தேர்வு செய்யும் கருவியால் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
வரையப்படும் படம் ஒளி ஊடுருவதாய் அமைய வேண்டும். இதற்கு, கருவிப் பெட்டியில்
உள்ள பொருத்தமான கருவியைத் தேர்வு செய்யுங்கள்.
ஷிப்ட் விசையை அழுத்திப் பிடித்துக் கொண்டே உங்கள் கிறுக்கலை
நகர்த்துங்கள். என்ன விந்தை.. நீங்கள் விரும்பிய பிரஷ் கிடைத்துவிட்டதா?
இப்போது வரிசையாகப் படங்களைப் பாருங்கள்
பென்சில் கருவியை எடுத்துக் கொண்டு சின்னதாய் ஒரு கிறுக்கல் ( கிறுக்கி
இடத்தைக் காட்டுவதற்காக வட்டமிடப்பட்டுள்ளது) இதனைச் சதுர வடிவில் புள்ளி, புள்ளிக் கோடுகளால் ஆன தேர்ந்தெடுக்கும்
கருவியால் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒளி ஊடுருவதாய் அமைவதற்கான ட்ரான்பரன்சியைத் தேர்வு செய்ய, படத்தில் காட்டி
இருக்கும் கட்டத்தில் சொடுக்க வேண்டும்.
அடுத்து நீங்கள் ஷிப்ட் விசையை அழுத்திக் கொண்டே இழுத்தால் உங்கள் இழுத்த
இழுப்பிற்கெல்லாம் வரைந்து கொடுக்கும் பிரஷ் கிடைத்துவிட்டதைப் பாருங்கள். வரைந்து
தள்ளுங்கள்.
பிரஷின் வடிவத்தையும் நிறத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றிக்
கொள்ளுங்கள்.
விரும்பிய படியெல்லாம் கிறுக்குங்கள். விதவிதமான ஓவியங்களை
உருவாக்குங்கள்.
இதில் நீங்கள் எது, எதை எல்லாம் மாற்றி அமைக்கலாம்?
1.கோடுகளின் தடிமன்
2.கோடுகளுக்குப் பதிலாக எழுத்துக்கள்
3.பென்சிலுக்குப் பதிலாகப் பிற வரை கருவிகள்
4.கோடுகளின் எண்ணிக்கை
5.ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களால் ஆன கோடுகளின் தொகுப்பு
6.பிரஷை நகர்த்தும் வேகம்
இப்படி ஆயிரக் கணக்கில் மாற்றங்களைப் புகுத்தி அசத்தலாம். செய்து
பாருங்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக