இணையத்தில் குறிப்பாக ஃபேஸ்புக்கிலும், வலைப்பூக்களிலும் தற்போது தாறுமாறாக அடிபடும் நபர் மனுஷ்யபுத்திரன். நம்ம மட்டும் விட்டுவைச்சா எப்படி...? :)
இவர் எழுத்தாளர், கவிஞர் என்றே தெரியாமல் மனுஷ்யபுத்திரனை ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிந்தவர்கள் ஏராளம். தொலைக்காட்சிகளில் விவாதப்பேச்சாளராக இன்னும் சிலருக்கு. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக்கண்காட்சியில் இவரது 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' கவிதைத்தொகுப்பை இவர் கையாலேயே வாங்கியபோது பெரும்பான்மையினர் மதிக்காமல் போகும் இன்னொரு இலக்கியவாதி என்றே நினைத்தோம். இணையமும், ஃபேஸ்புக்கும் அந்த எண்ணத்தை நொறுக்கிவிட்டது. அந்த கவிதைகளில் சுயபச்சாதாபம் மிகையாக கலந்திருந்தது போல தோன்றியது வேறு கதை.
சரி, நிகழ்காலத்திற்கு வருவோம். கிட்டதட்ட தமிழ்நாட்டின் எல்லா தொலைக்காட்சிகளிலும் விவாதங்களில் பங்கேற்று, தொலைக்காட்சி பேச்சாளாராகவே வெகுஜனத்திற்கு அறிமுகமாகிவிட்ட மனுஷ்யபுத்திரன் வெகு சமீபம் வரை சமூக/அரசியல் சீர்கேடுகளினால் கோபத்திலிருக்கும் ஒரு சாதாரணனின் மனநிலையையே ஒத்திருந்தார். அவரது பதிவுகள் புகழ்பெறக் காரணம் எதிலும் ஒதுங்கிப்போகும் மிதவாத எழுத்தாளர்கள் பக்கமிருந்து இப்படி ஒரு உரத்த குரலா என்று ஃபேஸ்புக் தமிழர்கள் மொத்தமும் திரும்பிப்பார்த்ததுதான். அதன்பிறகு விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையிலும் வெகுஜனத்தின் மனநிலையைப் பிரதிபலித்து தன் சொந்த சமூகத்தின் பெருவாரி எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டார் என்றாலும் தன் நிலையில் பின்வாங்காது அனைவரின் மதிப்பைப் பெற்றார்.
இப்படி ஃபேஸ்புக் கதாநாயகனாக வலம் வந்த மனுஷ்யபுத்திரன் அவ்வப்போது வரைமுறை பாராமல் தெளிக்கும் ஏகவசனங்களும், இலைமறைகாயாக வெளிப்படுத்திய மதப்பற்றும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை, ஆனால் யாரும் அறியாமலும் இல்லை. சிறிது சிறிதாக திமுக சார்பு பதிவுகள் வர ஆரம்பித்தவுடன் விமர்சனங்களும் எழ ஆரம்பித்தன. அதையும் ஏகவசனம் பேசியே ஒதுக்கித்தள்ளிய மனுஷ் கருணாநிதி பிறந்தநாளில் மேடையேறி திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு இணையாக கருணாநிதியைப் புகழ்ந்து தள்ள வெடித்தது கலவரம். அட.... ஃபேஸ்புக்கிலதான்.
மனுஷின் ஆதிஅந்த வரலாறை சொல்லும் அதிமுக அபிமானிகள் ஒருபுறம், மனுஷுக்கு சூடேற்றி மகிழும் திமுக உபிக்கள் ஒருபுறம், சொளேர் சொளேர் என்று சுற்றும் 'சவுக்கு' ஒருபுறம் என போர்க்களம்தான். இந்த கலவரத்தில் மக்கள் எல்லோரும் தன் பால்யகாலத்தில் உபயோகித்த விதம்விதமான சொம்புகளை வேறு நினைவு கூற நேர்ந்தது.
சரி, ஏன் இந்த அதகளம்? நமது நிலை என்ன? கண்டிப்பாக ஃபேஸ்புக்ல் சிறுபான்மையான அதிமுகவினரால் இப்படி பெரிய அளவில் தாக்கமுடியாது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற பதத்துக்கேற்ப இந்த ரணகளத்துக்கு மனுஷ்யபுத்திரன் அவர்களே காரணம். நாம் இந்த அதிமுக-திமுக சண்டைக்குள் போகவேண்டாம். அவரது பூர்வீகம், பதிப்பகம், கனிமொழி பிரச்சினை போன்றவையும் சுத்தமாக நமக்கு தேவையில்லை. ஆனால், சாதாரணமாக இலங்கைப்பிரச்சினை, பாலச்சந்திரன் படுகொலை, மீனவர்கள் பிரச்சினை, மின்வெட்டு, டாஸ்மாக் என சகல பிரச்சினைகளிலும் நடுநிலையாய் குரல் கொடுத்த அல்லது அப்படி நாம் நினைத்துக்கொண்ட மனுஷ்யபுத்திரன் இனி தோன்றும் விவாத அரங்கங்களிலும், ஃபேஸ்புக் பதிவுகளிலும் என்ன செய்வார் அல்லது எப்படி பேசுவார்? இதுதான் நம் கேள்வி.
தமிழகத்தின் எல்லா முக்கிய பிரச்சினைகளிலும் அதிமுக-திமுக இரண்டு கட்சியினரின் செயலின்மையும், சீர்கேடும் உள்ளது. இலங்கைப்பிரச்சினையிலும் கூட. இரண்டு பேரையும் இழுத்து வைத்து விமர்சித்தால்தான் உண்மை தெரியும். விவசாயம், விலைவாசி, மின்வெட்டு, மீனவர்கள் பிரச்சினையில் அலட்சியம் என எல்லாவற்றிலும் இருவரும் குற்றவாளிகள். அப்படியிருக்கையில் திமுக வட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட மனுஷ்யபுத்திரன் திமுகவை காபந்து செய்து அதிமுகவை மட்டும் குற்றவாளியாக்கிடுவாரா? அது இதுவரை இவர் கட்டிக்கொண்டிருந்த வேஷத்திற்கு முரண்பட்டிருக்குமே? கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்தையே கேள்விகளால் திணறடித்து கிழித்து தொங்கவிட்ட மக்கள் இவரை மட்டும் விட்டுவிடுவார்களா? அதற்கெல்லாம் எப்படி பதில் சொல்லுவார்? வழக்கம்போல 'பெருச்சாளிகள்' 'தெருநாய்' 'வெறிநாய்' 'மலம் தின்னுபவர்கள்' போன்ற இலக்கியப்பதங்களினாலா? இதுவரை பதிவர்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் இவர் நேரடியாக பதிலளிக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்?
எல்லாவற்றையும் விடுங்கள். எல்லோரையும் பொத்தாம்பொதுவாக அஃறிணைகளாக பேசவும், ஏளனம் செய்யவும் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இதுவரை அவரின் கவிதைகளுக்கு வாசகராக இருந்த நீங்கள் அவரது திமுக அரிதாரம் பிடிக்காமல் கேள்விகேட்டால் அவர் குறிப்பிட்ட 'சாக்கடைப் பெருச்சாளிகளில்' நீங்களும் ஒருவர். இதுதான் தன் வாசகர்களுக்கு அவர் தரும் பரிசா? திமுக ஜால்ராக்களால் நிறைந்திருக்கும் அவரது செவிகளில் இந்தக் கேள்விகள் விழுமா?
தங்களை அறிவுஜீவிகளாக காண்பித்துக்கொள்ளும் எழுத்தாளர்கள் மக்களுக்காகப் பேசும் தகுதியுள்ளவர்களல்ல என்பதை இவரும் இன்னுமொரு முறை நிரூபித்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக