வெள்ளி, 21 ஜூன், 2013

இயற்கையை வெல்ல முடியுமா? பகுதி 2

இ​யற்கையின் திருவிளையாடல்கள் என்னென்ன என்று யாராலும் கணிக்க முடியாது, இந்தியாவில் கனமழை பெய்கிறது. இந்தோனேசியாவில் கடும் காட்டுத் தீ பரவுகிறது. வாருங்கள் கொஞ்சம் பார்போம் அங்கு என்ன நிலவரம் என்னவென்று?


உ​த்தராஞ்சலில் பெய்த வரலாறு காணாத மழையினால் 1000 பேர் பலி என தகவல். மழை விடாதா என மக்கள் கொட்டித் தீர்க்கும் வானை அண்ணாந்து பார்க்கின்றனர்.  ஐநா அபாய அறிக்கை விடுகிறது குளோபல் வார்மிங் காரணமாகவே இந்தியாவின் பருவமழை பெய்வதை கணிக்கமுடியவில்லை, இந்த வெப்பநிலை மேலும் 2 டிகிரி ஏறினால் நிலைமையை சமாளிக்கவே முடியாது என்கிறது.



இந்தோனேசியா காடுகளில் பற்றிய அல்லது விவசாயம் செய்வதற்காக பற்றவைக்கப் பட்ட தீ கொளுந்து விட்டு எறிகிறது. அதனால் அந்த பிராந்தியமே புகை மண்டலமாக இருக்கிறது. மழை பெய்தால் மட்டுமே அந்த புகை மற்றும் தீயைனை கட்டு படுத்த முடியும் என இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.  இங்கோ மழை வராதா என மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.




இது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட படம். நண்பர்களே, பனிமூட்டம் என்று முடிவு கட்டிவிடாதீர்கள் இ​து நண்பகலில் பதிவு செய்யப்பட்ட படம்.


PSI எ​ன்றால் என்ன?
Pollutant standard index மாசுபடுத்தி நியமங்கள் அட்டவணை அல்லது PSI, இது முக்கியமாக ​காற்றிலுள்ள மாசுபாடுகளை அளவிடும் ஒரு சீரான அமைப்புதனை வழங்குகிறது. இது தினசரி அடிப்படையில் காற்று தரம் தெரிவிக்க ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (USEPA) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அளவுகோல்தனை அடிப்படையாக கொண்டது. இந்த அளவீடானாது தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் செய்தித்தாள்கள் மூலம் மக்களை சென்றடைகிறது. ஓவ்வொரு அரசாங்கமும் அந்தந்த பிராந்தியத்துக்காக இந்த அளவீடுகளீல் சிறிய மாற்றங்களை செய்கிறது. 



இ​ன்று அங்கு வரலாறு காணாத வகையில் 400PSI யைதொட்டுள்ளது புகை மண்டலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக