ஞாயிறு, 30 ஜூன், 2013

கணினியே தெரியாதவர்களும் கலக்கலாம்... பகுதி 006

நீங்களும் ஸ்டெகனோகிராபி (Steganography) கற்றுக் கொள்ளலாம்

நீங்கள் எதையாவது எழுதுகிறீர்கள். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதுவீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழ் மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் படிக்க இயலாது. ஆங்கிலம் மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்களால் நீங்கள் தமிழில் எழுதுவதை வாசிக்க முடியாது.

இங்கே நீங்கள் செய்யப்போகும் வித்தை இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. நீங்கள் எழுதி வைத்திருப்பதை வேறு யாரும் அவ்வளவு எளிதாகப் படித்துவிடக் கூடாது. நீங்கள் மட்டும்தான் படிக்கலாம். அல்லது நீங்கள் யாருக்கு உங்களது இரகசியத்தைச் சொல்கிறீர்களோ அவர்கள் மட்டுமே படிக்க இயலும். அது போல் எழுத முடியுமா? இந்த வித்தைக்கு ஸ்டெகனோகிராபி என்று பெயர். ஸ்டெனோகிராபி என்பதோடு குழப்பிக் கொள்ளாதீர்கள். அது வேறு.



ஸ்டெகனோகிராபி (Steganography)என்பது என்ன?

ஒரு விசயத்தைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை யார் மட்டும் படிக்க இயலும் என்பது இரகசியமாக வைக்கப்பட வேண்டும். எதிரி நாட்டில் இருந்து ஒரு வீரன் வருகிறான். அவன் ஏதோ செய்தி கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறான். அவன் கையில் எந்த ஓலையும் இல்லை. வேறு எதையும் அவன் கொண்டு வரவில்லை. ஆனால் அவனது தலையில் இருந்த முடி மட்டும் கன்னாபின்னாவென்று வெட்டப்பட்டிருக்கிறது. அதைத் தவிர அவன் ஒரு வெறும் ஆள். இந்த நாட்டு மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
அமைச்சரை உதவி செய்யக் கோருகிறார். அமைச்சர்கள் எப்போதுமே திறமை படைத்தவர்களாக இருப்பார்கள் இல்லையா? அமைச்சர் அந்த வீரனின் தலையைப் பொறுமையாக ஆராய்கிறார். பிறகு மன்னரிடம் இரகசியமாகத் தெரிவிக்கிறார். எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வரப் போவதாகச் செய்தி அனுப்பி இருக்கிறானாம். அமைச்சருக்கு மட்டும் எப்படித் தெரிந்த்து? அதுதான் ஸ்டெகனோகிராபி. அது எப்படி என்பதை மேலும் படிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்.





This is written in a secret language

இது போல் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது என்போம். என்ன இது..ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பிப் போவீர்கள். இது ஆங்கிலத்தில் அமைக்கப்பட்ட வாசகம் என்கிறோம். அடிக்க வருவீர்கள். வாசகத்தின் பொருள் இதுதான்

This is written in a secret language

சரியா? இது எப்படி முடிகிறது? எல்லாம் எழுத்துருவை மாற்றும் வேலைதான். ஆங்கிலத்தில் அடிக்கப்பட்ட வாசகத்தைத் தமிழுக்கு மாற்றுவது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றுவதைப் போலவே தமழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம். ஒரே மொழியில் வேறு எழுத்துருவைப் பயன்படுத்தியும் எழுதலாம். பின்வரும் சொற்றொடர் ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழிலேயே வேறு ஒரு எழுத்துருவிற்கு மாற்றியதுதான்.



இப்படி இருந்தால் உங்களால் எதையுமே படிக்க முடியர்து. ஆனால் இந்தச் செய்தியை அனுப்பி வைத்தவர் உங்களுக்கு அந்த இரகசியத்தைச் சொல்லிவிடலாம்.

இது வேறு ஒன்றும் இல்லை. நான் சொல்ல வந்த செய்தியை இயல்பாகத் தட்டச்சு செய்துவிட்டு, அனுப்பி வைக்கும்போது எழுத்துருவை மாற்றி இருக்கிறேன்.நீ இதை அப்படியே காப்பி செய்து ஒட்டிக் கொண்டு .. இன்ன எழுத்துருவைத் தேர்ந்தெடு. கடித வாசகத்தை எளிதாகப் படிக்க முடியும்என்று உங்களுக்கு மட்டும் இரகசியத்தைச் சொல்லிவிடுகிறார். அவ்வளவுதான்.

இதேபோல் நீங்கள் ஒரு கடிதம் எழுதி அதன் எழுத்துருவை மாற்றி அனுப்பி வைக்கலாம். எந்த எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை உங்கள் நண்பருக்குச் சொல்லிவிடலாம். இது நவீன காலத்துக் கணினிகளில் இரகசியமாக எழுதும் முறை. இப்போது அந்த வீரன் கதைக்கு..அதாவது தலைக்கு வருவோம். சாதாரணமாக அவன் தலையைப் பார்ப்பவர்கள் அவன் சரியாக முடி வெட்டிக் கொள்ளவில்லை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அமைச்சர் போன்றவர்கள் எப்படி ஆராய்வார்கள்? முடி இருக்கும் இடத்தை விட்டு விடுவார்கள். முடி இல்லாத பகுதிகளை மட்டும்கூர்ந்து பார்ப்பார்கள். அந்தக் காலி இடத்தில்தான் எழுத வேண்டிய எழுத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இருப்பதில் ஒன்றும் இல்லை. எது இல்லாமல் இருக்கிறதோ  அதில்தான் எல்லாம் இருக்கிறது.

குறிஞ்சியில் வந்துள்ள கணிணி சார்ந்த மற்ற கட்டுரைகளையும் பார்க்கலாமே.:
http://kurinjinet.blogspot.sg/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக