வியாழன், 30 மே, 2013

உலக பொருளாதார வரிசையில் ஜப்பானை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்தது

இந்திய பொருளாதாரம் சமீபத்தில் ஜப்பானை உலகளவில் முந்தி மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை தட்டி சென்றுள்ளதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD - Organisation for Economic cooperation and development) கூறியுள்ளது.  இது ஆட்சியாளர்களுக்கு பெரிய நிம்மதியை தரும் விசயம் ஆகும்.


ஆனால், OECD அமைப்பு இந்தியா​வின் வளர்ச்சி இறங்குமுகமாக இருக்கும் என கணித்துள்ளது. அது முன்பு இந்தியா​வின் வளர்ச்சி 5.9% இருக்குமென சொன்னது. ஆனால் தற்போது 2013 வரை 5.3%இருக்குமென சொல்லுகிறது.



"சீனா அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை கடக்கும். 2030ல் BRIICS(பிரேசில், ரஷ்யா, இந்தியா, இந்தோனேஷியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா) மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒப்பிடுகையில் தோராயமாக தற்போதய OECD அமைப்பின் பாதிக்கும் மேற்பட்ட தற்போதைய உறுப்பு நாடுகளின்(34 நாடுகள்) உற்பத்திக்கு சம்மாக இருக்கும். 

OECD இது 1960 முதல் இயங்குகிறது. பெரும்பாலும் முதலாம்தர நாடுகளே இதன் உறுப்பினர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக