சனி, 4 மே, 2013

சுற்றுலா - சில தகவல்கள், பகுதி - 1

நாமெல்லாம் நினைத்துகொண்டிருக்கிறோம் கடவுளின் தேசமாம் கேரளாவோ, கர்நாடகமோ இல்லை ராஜ்ஸ்தானோ  சுற்றுலாதுறையில் கொடிகட்டிப்பறக்கிறது என்று ஆனால் உண்மை அதுவல்ல சமீபத்தில் இந்திய சுற்றூலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஓர் தகவல்.

உள்நாட்டு சுற்றூலா பயணிகளை அதிகம் கவர்ந்தது உத்திரப்பிரதேசம், ஆம் கங்கையும் காசியும் போதுமே..
இ​ரண்டாவது நம்ம ஆந்திரா, திருப்பதி ஏழுகொண்டலவாடா போதுமே.
​மூன்றாவது நம்ம தமிழகம்தானுங்கோ..

அ​துபோல் சர்வதேச சுற்றூலா பயணிகளை அதிகம் கவர்ந்தது மகாராஷ்டிரம், நாம் இங்கு மும்பைக்கு வியாபார நிமித்திம் வரும் பயணிகளையும் கருத்தினில் கொள்ளவேண்டும்.

இ​ரண்டாவது நம்ம தமிழகம்தானுங்கோ..



நாமும் பொறுப்பாவோம்:
இ​தையெல்லாம் ஏன் இப்ப சொல்றேனாக்கா சில பேரு தமிழ்'சாதி'யின் பழம் பெருமை பேசுகிறேன் என்று சமீபத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கூட்டிய கூட்டத்தில் நம்ம போதிதர்மரின் வாரிசுகள் கட்டிய கல்கோவிலை சிதைத்ததாக பத்திரிக்கையில் தகவல் வந்தது.  ஐயாமாரே நீங்க புதுசால்லாம் எங்க தமிழ்'சாதி'யின் பெருமையைக் கட்டிக்காக்க மண்டிபோட மன்னிக்கவும்(எழுத்துபிழை) மாநாடு போட வேண்டாம் சாதியின் பெயரினால்.
நமக்கும் பொறுப்பு இருக்கிறது சகோதரர்களே. பொது இடங்கள் குறைந்த பட்சம் இந்த மாதிரியான பழமையான, தொன்மையான இடங்களையெல்லாம் கட்டிக்காப்போம், யாம் அறிந்தவரையில் வேறு எங்கும் இது மாதிரி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், தொன்மையான இடங்கள் நூற்றுக்கணக்கில் வெறும் நூறு கிலோமிட்டர் தொலைவினில் அருகினில் இருப்பதாக தகவல் இல்லை. ஆக நாம் புதுசா எதையும் உருவாக்காவிட்டாலும் இருப்பதையாவது பாதுகாப்பாக நம்ம சந்ததியினருக்கு விட்டுச்செல்வோம்.

ஆ​யிரம் ஆண்டுகள் அந்நியதேசத்தவரின் பிடியில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்பை விட நம்ம ஆளுமையின் கிழ்தான் இந்த மாதிரியான தொன்மையான இடங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.


யுனேஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்திலுள்ள தொன்மையான இடங்கள்:

பல்ல​வர்களின் கொடை: 7 முதல் 8ம் நூற்றாண்டு வரை
​1. மாமல்லபுரம் கற்கோயில்கள்

சோழர்களின் கொடை: 11 முதல் 12ம் நூற்றாண்டு வரை
2. தஞ்சை பிரகதிஸ்வரர் ஆலயம் (ராஜ ராஜ சோழன் I)
​3. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதிஸ்வரர் ஆலயம் (ராஜேந்திர சோழன் )
​4. தாராசுவரம் ஐராதீஸ்வரர் ஆலயம் (ராஜ ராஜ சோழன் II)

இ​யற்கையின் கொடை : சில ஆயிரம் ஆண்டுகள்
​5. நீலகிரி மலைத்தொடர், இது மட்டும் இல்லாவிட்டால் தென்னிந்தியா பாலைவனமாகவே இருந்திருக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக