குறிஞ்சியினை ஆரம்பிக்கும்போது
எப்படி அது வர வேண்டுமென நண்பர்களோடு விவாதிக்கும்போது, ஆனந்தவிகடனைப் போன்றோ,
குமுதத்தைப் போன்றோ அல்லது இந்தியாடுடேவைப் போன்றோ இருக்க வேண்டுமா அல்லது எப்படி அது வரவேண்டும் என்றெல்லாம் பலவாறு சிந்தித்தோம்.
விகடன் பத்திரிக்கை உலகின் சூப்பர்ஸ்டார்:
நான் சிறுவனாக இருக்கும்போது என் தந்தை
வேலைக்கு சென்று திரும்பும்போது வார இறுதியில் ஆனந்தவிகடன் வாங்கி வருவார், அவர் முகம் கை, கால் கழுவிவிட்டு சாப்பிட்டு
வரும் முன்ன்ர் ஓர் 30நிமிட இடைவேளையில் நான் அதை ஓரே மூச்சில் படித்து முடித்துவிடத்
துடிப்பேன். அந்தளவுக்கு அதில் விஷயம் இருக்கும், சும்மா சூப்பர்ஸ்டார் படம் பார்க்க
போனால் எப்படி விருவிருவென படம் ஆரம்பமும் முடிவும் தெரியாதோ, மேலும் படம்
முடிந்து வரும் பொழுது நம்ம எனர்ஜி லெவல்(ENERGY LEVEL) வேறு எக்குத்தப்பா எகிறுப்
போய் இருக்கும். நாடி நரம்பெல்லாம் முறுக்கெறி
போய்ஆயிரம் கும்கி ஆணை பலம் வந்தது போல இருக்கும். அது போலவே அந்த நாட்களில்ஆனந்தவிகடனும் என்னுள்ளே மாற்றங்களை
விதைத்தது. ஓவ்வொரு வாரமும் என் தன்னம்பிக்கையை வளர்த்தது விகடன்தான், வார இறுதி எப்பொழுது
வரும், விகடன் எப்பொழுது வரும் என தவம் இருந்த நாட்கள் அது.
ஆனால் இன்று அந்தளவுக்கு விகடன் என்னுள்ளே
மாற்றங்களை விதைப்பதில்லை, காரணம் நான் வளர்ந்துவிட்டேனா அல்லது அவர்களின் வியாபார
தந்திரங்களை ஓரளவு அறிந்துவிட்டதினாலையா என்று தெரியவில்லை.
குமுதம் ஜனரஞ்சகமான பத்திரிக்கை:
விகடன் சூப்பர்ஸ்டார் என்றால் குமுதம் கங்கணம்
ஸ்டார், அதில் சினிமா பிரதான இடம் பிடித்தது என்றாலும் அந்த நாட்களில் அதுதான் நம்பர்
ஒன் பத்திரிக்கை, கில்மா முதல் அம்மா வரை சும்மா புகுந்து கவர் செய்திருப்பார்கள்.
இந்தியா டுடே புள்ளிவிவரங்களின் தொகுப்பு:
இவர்கள் அனைத்து விவரங்களையும் தரவுகளின் அடிப்படையிலேயே எழுதுவர். இவர்களின் வார்த்தை பிரயோகம்
இன்றளவும் வித்தியாசமான் ஒன்று, சில முக்கியமான கட்டுரைகளை இவர்களின் ஆங்கில பதிப்பிலிருந்து
மொழிமாற்றம் செயவதினால் வந்ததாக இருக்குமோ...
சரி சரி நம்ம கதைக்கு வருவோம்:
ஆக இப்படி இருக்கனுமா, அப்படி
இருக்கனுமா யோசித்து பார்த்துவிட்டு, எல்லாம் கலந்த கலவையாக இருப்போம் என முடிவுக்கு
வந்தோம்.
ஆக இங்கு
அரசியல் பேசுவோம்,
அறிவியல் அலசுவோம்,
சினிமா கதைப்போம்,
இலக்கியங்கள் இயற்றுவோம் (ஹிஹி
இலக்கணபிழைகளோடுதான்)
விவாதங்கள் செய்வோம்,
விதண்டாவாதங்கள் செய்யோம்.
இந்தவரிசையில்
புள்ளிவிவரங்களை அள்ளிவிடலாமா...
ஓரு பக்க கட்டுரை சொல்ல வந்ததை
ஓரு பார் வரைபடம்(BAR CHART) அல்லது பை வரைபடம்(PIE CHART) மூலம் எளிதில் விவரித்து
விடலாம், அந்த வகையில் இனிமேல் குறிஞ்சியில் புள்ளிவிவரங்களின் கோர்வையை வெளிவிடுவதாக
உள்ளோம்.
இந்த தகவல்கள் நம்ம இந்திய அரசாங்கம், மாநில
அரசாங்கம், உலகாளவிய அமைப்புகள்,ஆங்கில ஊடகங்கள் ம்ற்றும் தமிழ் ஊடகங்கள் என நாம் பார்த்து
படித்த விஷயங்களின் கோர்வையே ஆகும்.ஆக நன்றிகளெல்லாம் அவர்களைச் சார்ந்தது
ஆகும், நாம் வெறும் கருவியே ஆகும்.
பச்சபுள்ள மன்னாரு: அண்ணாத்தே அப்படினாக்கா
இவங்கள்ளாம் உங்க முன்மாதிரியா எடுத்துக்கொள்ளலாமா?
Question கோயிந்து: எடுத்துகொண்டாலும் தவறு ஏதுமில்லை, பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் அவர்கள். தினத்தந்தி, தினமலர், தினமணி, விகடன், குமுதம் போன்ற ஊடகங்களை தவிர்த்து விட இயலாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக