கூகிள் கண்ணாடி ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ், ஸ்பீக்கர்கள், ஒரு கேமரா, ஒரு மைக்ரோஃபோன், டச்பேட் , பேட்டரி, மைக்ரோப்ராசசர் மற்றும் ஒரு கிரையோஸ்கோப் கொண்டுள்ளது நம் தலையின் சாய்வை கண்டறிய. இது மிகச்சிறியதாகவும் எடை குறைந்ததாகவும், மூக்கு கண்ணாடி போல அணிந்து கொள்ள எளிதாக இருக்கிறது.
குறிப்பிடத்தக்க அம்சம், அதிலுள்ள PROJECTOR வழியே வரும் படங்கள் ஓரு மூப்பட்டக கண்ணாடியிலான திரையில் விரிகிறது. அந்த சிறிய திரை உங்கள் விரல் அளவு ஒரு முலையில் இருக்கிறது, அதுவே உங்கள் விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் காட்டுகிறது.
உங்கள் கட்டளை சாத்தியமாக:
கூகுள் கண்ணாடியில் சுவாரஸ்யமான வகையில் குரல் உள்ளீடு (ஒரு மைக்ரோஃபோன்) உள்ளது. அது Google தேடுபொறி உடன் உங்களை இப்போது நேரடியாக இணைக்கிறது.
நீங்கள் ஒரு கட்டளை அல்லது கேள்வி அனுப்ப முதலில் "சரி கண்ணாடி" (OKAY GLASS) என்று சொல்லி கண்ணாடியை உங்கள் வயப்படுத்தவேண்டும். மேலும் இதனை பேசாமலே செயல்படுத்த உங்கள் தலையை மேலை சாய்க்க கண்ணாடி உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு செய்கிறது.
அது மொழி தெரியாத இடங்களுக்கு நீங்கள் சென்றால் TRANSLATORஆக உதவுகிறது
அது வழி தெரியாத இடங்களுக்கு நீங்கள் சென்றால் MAPஆக உதவுகிறது
அது நீங்கள் விரும்பிய படங்களை பார்த்த நொடியில் படம் எடுக்க CAMERAவாக உதவுகிறது.
அது தகவல்களை உடனுக்குடன் தருகிறது.
அது மற்ற மென்பொருள் வடிவமைப்புகளுடனும் (Software compatability)வாக ஓத்துபோகின்றது.
அதன் தற்போதய விலை 1500$ஆக உள்ளது. இதன் மூலம் நாம் புகைப்படக்கருவி, வரைபடக் கருவி, தொலைபேசி என தனித்தனியே கையில் எடுத்த செல்ல தேவையில்லை.
பச்சபுள்ள மன்னாரு: இதை வைச்சு நம்ம ரோட்டு ரோமியோஸ் எளிதாக நம்ம பெண்டு புள்ளங்களை அசந்த சந்தர்ப்பமாக பார்த்து படம் எடுத்து தள்ளிவிடுவாய்ங்களே?
QUESTION கோயிந்து: என்ன பண்ண நன்மையும் தீமையும் கலந்ததே உலகு!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக