செவ்வாய், 23 ஏப்ரல், 2013

நவீன ஏகலைவன்கள் உருவாக புத்தகங்கள் தேவை

இன்று ஏப்ரல் 23, சர்வதேச புத்தகங்கள் தினம்:

என்னால் புத்தகங்கள் இல்லாமல் வாழமுடியாது - தாமஸ் ஜெபர்சன்

ஓர் நல்ல சமுதாயம் கட்டமைய வேண்டுமானால் நல்ல புத்தகங்கள் சமூகத்தில் இருக்க வேண்டும். அதனை மக்களும் வாசித்து பயன்பெற வேண்டும். ஓவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலான புத்தக கூட்டங்கள் அதாவது குட்டி நூலகம் இருக்கவேண்டும். ஓவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தினை அறிமுகப்படுத்திட வேண்டும். அதுவே அவர்களை செம்மைப்படுத்தும். தமிழர்கள் குறைந்தப்பட்சம் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்கள், மகாத்மாவின் சத்தியசோதனை, தமிழ் மற்றும் பிற மொழி இலக்கண நூல்கள் என வெகு முக்கியமான புத்தகங்களை தங்கள் குழந்தைகளை வாசிக்க சொல்லவேண்டும்.



மேலும் தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், என்னைக் கேட்டால் DO IT YOURSELF (EG. Assemble computer yourself) போன்ற புத்தகங்கள் மூலம் இளையோர்களின் திறனை மேம்படுத்தவும், தங்களின் வீடு மற்றும் பள்ளி சம்பந்தபட்ட அத்தியவாசிய தேவைகளை அவர்களே செய்து கொள்வதற்கு இந்த மாதிரியான புத்தகங்கள் உதவும். அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் செயல்முறை சார்ந்த திறனையையும், கற்பனைத்திறனையும் வளர்க்க உதவும். அதன் காரணமாக புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் மலரும். இக்காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மட்டும் மாணவர்களின் திறன் வளர்க்க முன்னெடுக்க வேண்டும் என்று எண்ணாமல் பெற்றோர்களும் களம் இறங்க வேண்டும். நல்ல புத்தகங்கள் நல்ல சமுதாயத்தினை கட்டமைக்கும்.

நவீன புத்தகங்கள் நவீன ஏகலவைன்களை உருவாக்கும், யாருக்கு நல்ல கல்வி வசதி கிடைக்கவில்லையோ அவர்கள் புத்தகங்கள் மூலமாகவே தங்களின் அறிவு திறனை மேம்படுத்தமுடியும்.

ஏன் இன்று புத்தக தினம்?
 உலகபுகழ் பெற்ற இலக்கியவாதிகளான க்ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ போன்றோர் மறைந்த தினமான இன்று ஏப்ரல் 23ம் தேதியை இவர்களின் இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் ச ர்வதேச புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

புத்தகம் சார்ந்து குறிஞ்சியில் வந்த இந்த கட்டுரையையும் படிக்கலாமே:

http://kurinjinet.blogspot.sg/2013/04/blog-post_22.html#!/2013/03/blog-post_2521.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக