ஓரு சிறிய நிகழ்வை இங்கு நினைவு கூற விரும்புகிறோம்
நாம் எல்லோரும் அந்த படத்தின் கதை அமைப்பிலும், பிரம்மாண்டத்திலும் மெய மறந்திருந்தோம், கேமரூன் அவர்கள் நினைத்திருந்தால் அந்த காட்சியை அவ்வாறே வைத்திருந்திருக்கலாம், ஆனால் அவர் தன்னுடைய தவறை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாம் அந்த காட்சிக்கு தேவையான கிராபிக்ஸ் திட்டத்திற்கு மீண்டும் செலவு செய்து திருத்திய பிறகே படத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.
அது போன்று நமது சகோதரர் 'திரு.சுபதனபாலன்' அவர்களும் குறிஞ்சியின் தவறை பின்வருமாறு சுட்டிக்காட்டியிருந்தார்
படத்தில் மதச்சின்னங்கள், குறியீடுகளைத் தவிர்க்கலாமே- Suba Dana balan ,
குறிஞ்சியின் விளக்கம்:
நாங்களும் கேம்ரூன் அவர்களை போன்று எங்களின் படைப்புகளும் சிறப்பாக வெளிவரவேண்டும் என விரும்புகிறோம்.
ஆயினும் அந்த கோபுரச்சின்னம் தமிழர்களின் அடையாளமாகவே நாங்கள் பார்த்தோம் அதை மதச்சின்னமாக நாங்கள் பார்க்கவில்லை, மேலும் தமிழக அரசின் முத்திரைச்சின்னமும் கோபுரமே என நியாபகப்படுத்துகிறோம்.
நல்லது சகோதரரே, உங்களின் நுட்பமான பார்வையைக் கண்டு வியக்கிறோம், நாங்கள் எந்த சாதி, மத, இன உணர்வுகளையும் சார்ந்தவர்கள் அல்ல, எங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நாங்கள் எங்கள் சொந்த முகப்பக்கத்திலோ அல்லது மின்னஞ்சலின் மூலமாகவோ வெளிப்படுத்துவோமே ஓழிய குறிஞ்சியின் வாயிலாக அல்ல, மேலும் எங்களின் நோக்கம் மனித குலத்தின் மாண்பு மேன்மைப்பட வேண்டும் என்பதே.
இருப்பினும் உங்களின் பொன்னான கருத்தை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம், எங்களது குழுவினருடன் விவாதித்த பிறகு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஓர் இலச்சினையை வெளிவிடுவோம் விரைவில், நீங்கள் விரும்பினால் உங்கள் மனதில் தோன்றிய ஓர் இலச்சினையை எங்களுக்கு தெரியப்படுத்தலாம் எமது நண்பர்களும் அதை விரும்பினால் அதுவே நிரந்தரமாகவும் ஆகலாம்.
குறிஞ்சியோடு இணையலாமே:
குறிஞ்சியில் உங்கள் எழுத்துகளும் பதிவு செய்ய நீங்கள் விரும்பினால் உங்கள் கட்டுரைகளை குறிஞ்சியின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள், உங்கள் கட்டுரையின் எண்ணமும் வடிவமும் குறிஞ்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டுமேயொழிய எந்தவிதமான செய்தியாகவும் அது இருக்கலாம்
மேலும் குறிஞ்சியில் வந்துள்ள அனைத்து கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள் என நம்புகிறோம், அதுதொடர்பான உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அது எங்களை செம்மைபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய கட்டுரைகளை அதிகம் எழுததூண்டும்
நன்றி - குறிஞ்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக