வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஐடி மையம் IT HUBS

ஐடி மையம் IT HUBS எனப்படும் ஐடி சார்ந்த தொழில் நிறுவனங்களை  ஈர்ப்பதில் நகரங்களுக்கிடையில் உலகளாவிய ஓரு ஒப்பீடு.

​வழக்கம் போல நம்ம தோட்ட நகரம் பெங்களூர் முதலிடத்தினை வகிக்கிறது. மும்பையை பிலிப்பைன்சின் தலைநகரம் மனிலா குப்புற தள்ளியதில் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்தில் மும்பை விழுந்தது.  டெல்லி, சென்னை, ஹைதராபாத், புனே நகரங்கள் 4,5,6,7 இடங்களை பிடித்தது.



சண்டிகர், கொல்கத்தா, கோயம்புத்தூர், ஜெய்பூர், புவனேஸ்வர், அகமதாபாத்  மற்றும் திருவனந்தபுரம் முறையே 23, 25, 31, 38, 55, 63 & 68வது இடத்தினை பிடித்தது.  இதில் சண்டிகர், கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் அகமாதாபாத்  நகரங்கள் முன்னேறி செல்கின்றது.. மற்ற நகரங்கள் கடந்த வருட இடத்திலிருந்து சிறிது சறுக்கியுள்ளது.

அ​கமாதாபாத் 6 இடங்கள் கடந்த வருடத்திலிருந்து முன்னோக்கி வந்ததுவே அதிகப்படியான இந்திய நகரத்தின் பாய்ச்சலாகும், அது பொருளாதாரம் சார்ந்த ஐடி நிறுவனங்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் பிரதம வேட்பாளர் மோடி ஏற்கனவே சொன்னது அகமாதாபாத்தினை பொருளாதார மையமாக மாற்றுவேன் என்றார். அது போலவே அதன் செயல்பாடும் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக