உருளை கிழங்கு, வெங்காய சிப்ஸ் இல்லங்க இது செமிகண்டக்கர் சிப் அதாங்க கணினி, அலைபேசி மற்றும் இன்ன பிற மின்னனூவியல் பிரிவில் உபயோகப்படுத்துகின்ற பொருளுங்க.... சரி விசயத்துக்கு வருவோம்...
செமிகண்டக்கர் பிரிவில்
IBM மற்றும் ST மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ரூ 50,000 கோடி முதலீடு செய்வது
தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னேறிய நிலையில் உள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய chip-maker ST மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ், இவர்களுடன் IBM உள்ளடக்கிய கூட்டணி ஆனது
ஆரம்பத்தில் ரூ .25,000 கோடி முதலீடு செய்ய விருப்பம் என்று உத்தேசமாக
சொல்லியுள்ளது.
இந்திய அரசு அந்நிய செலாவணி
கிடைக்கும் என்று இந்த திட்டத்தை ஆரம்பிக்கவில்லை இதனை நம்பிக்கை மிக்க முதலீடாக
பார்க்கிறது என இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இந்திய அரசு அதிகாரிகள்
கூறியுள்ளனர். இதன் மூலம் வன்பொருள் உற்பத்தியில் பின் தங்கிய இந்தியா இந்த துறையில் முன்னேற்றம் காட்டும் என பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலையின் இடம் முடிவு
தொடர்பாக முதலீட்டர்களின் விருப்பம் ஆனது குஜராத் மற்றூம் கிரேட்டர் நொய்டா என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது, இருந்த பொழுதும் பெங்களூரும் முண்ணனியில் உள்ளது.
பெங்களூர் அருகே 42 சதுர கிலோ மீட்டர் பரந்து ஒரு தகவல் தொழில்நுட்ப முதலீட்டு
பிராந்தியம் (ITIR) அமைக்கப்படுகிறது, அங்கே இந்த தொழிற்சாலைகள் வர வாய்ப்பு
அதிகம்.
இந்திய சில்லு வடிவமைப்பு
மற்றும் சரிபார்ப்பு துறையில்(DESIGN & TESTING) முக்கிய மையமாக உள்ளது
என்றாலும், உற்பத்தி மையமாக(PRODUCTION HUB) இல்லாது இருந்தது இதுவரை. இது சாத்தியபடவேண்டுமெனில்
அவர்கள் புதிதாக ஒரு பெரிய விற்பனையாளர் அடிப்படை கட்டமைப்பினை உருவாக்க வேண்டும், அது நாட்டின் வெளிநாட்டு முதலீட்டு உற்சாகப்படுத்தும் வகையில் அமையவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக