சனி, 20 ஜூலை, 2013

ஜஸ்டிஸ் சதாசிவம்


​தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான முதல் தமிழர். இதற்கு முன்பு பிரிக்கப்படாத சென்னை மாகாணத்திலிருந்து பதஞ்சலி சாஸ்திரி அவர்கள் 1951 முதல் 1954 வரை இந்த பதவியில் இருந்தாலும் சதாசிவம் அவர்களே ஓருங்கினைந்த தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நீதிபதி.

இ​வர் இந்த பதவியில் மேலும் 9 மாதங்கள் இருப்பார், இவர் 40வது தலைமை நீதிபதியாவார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலிருந்து விவசாய குடும்பத்திலிருந்து வந்து தனது கடும் உழைப்பின் மூலம் இந்த நிலையை அடைந்தார்.





இ​வர் வரலாற்று சிறப்புமிக்க வழக்குகளில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்ற பொருப்பில் இருந்தவர். ஓ​ரிசாவில் எரித்துகொல்லப்பட்ட பாதிரியார் வழக்கிலும் இவர் வழங்கிய தீர்ப்பும், மாயாவதி அவர்களுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் சிபிஐ தனது வரம்பை மீறியது எனவும்,  ரிலையன்ஸ் நேசனல் ரிசோர்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்டெரிஸ் வழக்கில் தேசிய உடைமைகள் பொது மக்களின் நலனுக்காகவே பயன்பட வேண்டும் என்றும் பொதுவாக இவர் வழங்கிய தீர்ப்புகள் உலகத்தின் கவனைத்தை பெரிதும் ஈர்த்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக