புதன், 5 ஜூன், 2013

சுஜாதா - ரங்கராஜன்.


​பலத்த சர்ச்சைகள், விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எது சரி எது தவறு என்று தர்க்கம் நடத்த நான் வரவில்லை, அவரது எழுத்து நடை தமிழ கூறும் நல்லுகிற்கு புதிது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவர்தான் எழுத்துலகின் சூப்பர்ஸ்டார், 70 - 80களில் பிறந்த இளைஞர்களுக்கு இளையராசா மட்டுமல்ல சுஜாதாவும் தவிர்க்க முடியாத நபராகி போனவர்.

என்னால் இந்த பேட்டியை அ​வர் தன்னுடைய சொந்த வாழ்வை அடமானம் வைத்து ஓர் சமுதாயத்திற்கு  இருளில் அகல்விளக்காய் ஓளி தந்தவர் என்று வேண்டுமாயின் எடுத்து கொள்ள முடியும்,  திரு செயமோகன் கூறியவாறு ​நாம் எட்டிப் பார்க்கவேண்டியது எழுத்தாளனின் எழுத்துக்களை மட்டுமே ஓழிய அவனது திரை மூடிய சன்னலுக்குள்ளே அல்ல, ஆக அவரது எழுத்துக்களை மட்டும் எட்டிப்பார்ப்போம்.

எ​ப்படியோ உங்கள் மகிழ்வையும் எங்களுக்காக அடமானம் வைத்த திருமதி.சுஜாதா அவர்களுக்கு நன்றி என்று ஓரு வார்த்தையில் சொல்லி முடித்து விட விரும்பவில்லை அம்மா (இந்த வார்த்தையில் அனைத்தும் அடக்கம் என நம்பும் ஓருவன்)...


மீதியை நண்பர்களின் தளங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்  ஏன்னா, என்ன அங்கிட்டு எம் பொண்டாட்டி முறைக்கிறா, நான் இங்கிட்டு அப்பிட்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக